ஐந்து, பத்து ரூபா இல்லைங்க.. முழுசா ரூ. 1.10 லட்சத்தை குறைச்சுட்டாங்க.. யமஹா இவ்ளோ நல்ல மனசு பிராண்டா!!
எல்லா நிறுவனங்களும் புதிய விலையில் தங்களின் வாகனங்களை விற்பனைச் செய்ய தொடங்கி இருக்கின்றன. அதாவது, உயர்த்தப்பட்ட விலையில் வாகனங்களை விற்பனைச் செய்ய தொடங்கி இருக்கின்றனர் உற்பத்தியாளர்கள். இந்த மாதிரியான சூழலில் யமஹா (Yamaha) நிறுவனம் தனித்துவமாக தன்னுடைய புதிய பைக் மாடல்களை விலையை குறைத்து விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்3 (R3) மற்றும் எம்டி-03 (MT-03) ஆகிய பைக் மாடல்களையே அது விலையைக் குறைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர்.
நாளை முதலே இந்த குறைவான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த விலைக் குறைப்பானது நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டே விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 1.10 லட்சம் வரையே இந்த பைக்குகளின் விலையில் குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை குறைப்பால் தற்போது ஆர்3 பைக் மாடலின் ஆரம்ப விலை 3.59 லட்சமாக குறைந்திருக்கின்றது. இதேபோல், எம்டி-03 மாடலின் ஆரம்ப விலை ரூ. 3.49 லட்சமாக குறைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த பைக்குகளின் விற்பனை மிகப் பெரிய வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யமஹா ஆர்3 ஓர் சூப்பர் ஸ்போர்ட் வகை பைக் மாடல் ஆகும். இந்த பைக்கின் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றத்தை வைத்து பார்க்கையில் யமஹா நிறுவனத்தின் மோட்டோஜிபி ஒய்இசட்ஆர் எம்1 (MotoGP YZR M1) மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது.

இதன் விலை குறைக்கப்பட்டு இருப்பது தற்போது கேடிஎம் ஆர்சி 390 மாடலுக்கு கூடுதல் போட்டியை தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பைக் மாடலுக்கு போட்டி பைக் மாடலே இதுவாகும். யமஹா எம்டி-03 அதிக கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட பைக் மாடலாக உள்ளது.
சொல்லப் போனால் மற்ற எம்டி மாடல்களைக் காட்டிலும் இது மிக மிக அதிக கவர்ச்சியான பைக்காகக் காட்சியளிக்கின்றது. ட்வின் எல்இடி, மோனோ கிராஸ் வகை சஸ்பென்ஷன் (Mono-Cross Suspension) உள்ளிட்டவை இதற்கு அட்டகாசமான லுக்கை வழங்கும் விதமாக இருக்கின்றன. தொடர்ந்து நிம்பிள் வகை ஃப்ரேமைக் கொண்டே இந்த பைக்கை யமஹா தயார் செய்திருக்கின்றது.
இந்த இரண்டு பைக்குகளிலும் யமஹா நிறுவனம் 321 சிசி பாரல்லல் ட்வின் சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்டட் லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 41 பிஎச்பி மற்றும் 29.5 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாரில் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்களை உயர்த்தப்பட்ட புதிய விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில், யமஹா நிறுவனம் நல்ல மனதுடன் குறைக்கப்பட்ட விலையில் தன்னுடைய அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய பைக்குகளை விற்பனைச் செய்ய முன் வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








