2 பைக்கையும் சேர்த்தே 8 பேர் தான் வாங்கியிருக்காங்க!

யமஹா நிறுவனத்தின் ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய கார்களின் விற்பனை கடந்த ஜூலை மாதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த இரண்டு கார்களும் சேர்த்து மொத்தமே 8 பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளது. ஒரு மாதம் முழுவதும் முயற்சித்து ஏன் 8 பைக்குகள் மட்டும் விற்பனையாகியுள்ளது? அபபடி இதில் என்ன இருக்கிறது? விரிவாக காணலாம் வாருங்கள்.

யமஹா நிறுவனம் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் என்ட்ரி லெவல் பிரிமியம் பைக்ககளில் ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பைகஅகுகளை விற்பனை சமீப காலமாக கணிசமான அளவு விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

Yamaha R3 MT03 Sales

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த இரண்டு பைக்குகளும் சேர்ந்து மொத்தமே 8 பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு விட விற்பனையில் அதிகம் என்றாலும் எண்ணிக்கையில் மிக குறைவாகவே உள்ளது. கடந்தாண்டு இதே ஜூலை மாதத்தில் வெறும் 6 பைக்குகள் தான் விற்பனையாகியிருந்தது. ஒராண்டில் 33.33 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆனால் வெறும் 2 பைக்ககள் தான் விற்பனையில் அதிகமாகியுள்ளது. இதுவே கடந்த ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்த ஜூன் மாதம் வெறும் 5 பைக்குகள் விற்பனையாகியிருந்தன. தற்போது விற்பனை 60 சதவீதம் அதிகமாகி 8 பைக்குகளாக அதிகரித்துள்ளது. ஆனால் எண்ணிக்கையில் பார்த்தால் வெறும் 3 பைக்குகள் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

Yamaha R3 MT03 Sales

மற்ற பைக்குகளை ஒப்பிடும் போது இந்த பைக்குகளின் விற்பனை மிகக்குறைவாகவே உள்ளன. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருகு்கிறது. இதற்கான முக்கியமான காரணம் அதிக விலை தான். யமஹா நிறுவனம் தனது ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய பைக்குகளின் விலையை பிரிமியம் செக்மெண்டில் வைத்துள்ளதால் இதன் விலை அதிகமாக உள்ளது. இதனால் குறைவான வாடிக்கையாளர்களே அந்த செக்மெண்டில் உள்ளனர்.

அதே நேரம் இது பிரிமியம் பைக் என்பதால் இந்த பைக் குறிப்பிட்ட நகரங்களில் குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைக்கிறது. பொதுவாக பிரிமியம் பைக்குகள் காட்சிக்கு வைக்கப்படும் போது ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை நேரில் பார்க்கும் போது அவர்கள் பைக் வாங்கும் முடிவை எடுப்பார்கள். இந்த பைக் அதிக டீலர்ஷிப்களில் காட்சிக்கு வைக்கப்படவில்லை என்பதும் விற்பனை குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம்.

Yamaha R3 MT03 Sales

அதே நேரம் போட்டி நிறுவனங்கள் இந்த பைக்கிற்கு போட்டியாக வெளியிடும் பைகஅககள்மக்கள் மத்தியில் பிரபலமாக இரு்கிறது. உதாரணமாக கேடிஎம் ஆர்சி 390, டியூக் 390 மற்றம் கவாஸகி 400 ஆகிய பைக்குகள் இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இதையும் மீறி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்க யமஹா நிறுவனம் போராடி வருகிறது.

இந்தியாவில் பிரிமியம் ரக பைக்குகளுக்கு நல்ல மவுசு அதிகரித்து வந்தாலும் குறிப்பாக இந்த மாடல்கள் பெரிய அளவில் மக்களிடம் ஈர்ப்பை பெறவில்லை. இந்த பைக் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இந்த பைக் மார்கெட்டில் இருக்கிறது என்பதை புரிய வைக்கவும், இளைஞர்களை ஈர்க்கும் மார்கெட்டிங் யுக்திகளை செய்தால் நிச்சயம் இதன் விற்பனை மேலும் அதிகமாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இந்த பைக்கின் விற்பனை அதிகமாகும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி தீபாவளிக்கு பரிசு காத்திருக்கிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் பேசினார். இதனால் விற்பனை ஜிஎஸ்டி குறையும் வரை மேலும் மந்தமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2025, 10:30 [IST]
English summary
Yamaha r3 mt03 sales drop to 8 units july 2025
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X