49 கி.மீ மைலேஜ் தரும் இந்த ஸ்கூட்டரை இவ்வளவு பேர் வாங்குறாங்களா? யமஹாக்கு அடித்தது ஜாக்பாட்!

கடந்த ஜூன் மாதம் பெரும்பாலான டூவீலர் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சியை கண்ட போதிலும் யமஹா நிறுவனத்தால் பெரிய அளவில் வளர்ச்சியை காண முடியவில்லை. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 24 சதவீத வீற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட வாகனம் தான் விற்பனையை தொடர்ந்து அதிகமாகவே வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு காலத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த டூவீலர் நிறுவனம் தான். யமஹா. ஆனால் சமீப காலமாக அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 2024ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது 24 சதவீததம் குறைவாக விற்பனையாாகியுள்ளது. சில மாடல்கள் மட்டும் வளர்ச்சியை பெற்றுள்ளன. இந்நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சிக்கு என்ன காரணம் என காணலாம் வாருங்கள்.

Yamaha Ray ZR 125 Sales

யமஹா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 4,417 வாகனங்களை விற்பனவை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் 58,471 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. மாததாந்திர விற்பனையிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 46,086 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

இந்நிறுவனத்திலேயே சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர் என்றால் ரே இசட் ஆர் என்ற ஸ்கூட்டர் தான். இந்நிறுவனம் மொத்தம் 14,274 வாகனங்கள் விற்பனவையாகியுள்ளது. இது 5.99 சதவீத வளர்ச்சி வளர்ச்சியை பெற்றுள்ளது. மாதாந்திர விற்பனை வளர்ச்சியை கணக்கிட்டாலும் 9.61 சதவீத விற்பனை வளர்ச்சியை பெறுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் 32 சதவீதம் இந்த ஸ்கூட்டர்கள் தான் விற்பனையாகியுள்ளன.

Yamaha Ray ZR 125 Sales

இதுவே சிறப்பாக விற்பனையாகும் பைக் என்றால் அது யமஹா எஃப் இசட் பைக் தான். மொத்தம் 10,767 பைக்குகள் கடந்த ஜூன் மாதம் விற்பனவையாகியுள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத விற்பனையை விட 10.58 சதவீதம் குறைவுதான். அதே நேரம் மாதாந்திர விற்பனையும் 17.04 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பைக்கில் அம்சங்கள் குறைவாக இருப்பதால் விற்பனை சற்று குறைவாக இருக்கிறது.

யமஹா நிறுவனத்தின் ரே இசட் ஆர் ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ81,471 முதல் ரூ94,650 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் 4 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் டிரம், டிஸ்க், டிஸ்க் ரேஸிங் ப்ளூ, ஸ்டிரீட் ரேலி ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த ஸ்கூட்டரில் 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 49 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மொத்தமே 99 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இதில் 5.2 லிட்டர் டேங்க் வசதி இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இன்ஜின் 8.04 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் யமஹா நிறுவனம் பல மாடல்களை அப்டேட் செய்யாமல் வைத்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த விற்பனை குறைத்துள்ளது. இருந்தாலும் அதிக அளவில் ரே இசட் ஆர் ஸ்கூட்டர் விற்பனையாவதால் நிச்சயம் இதை அப்டேட் செய்தால் விற்பனை அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 12:35 [IST]
English summary
Yamaha ray zr 125 sales june 2025 full details
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+