ஆர்எக்ஸ் 100 பைக் கனவில் விபூதி அடித்த யமஹா! இப்படி சொல்லுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
யமஹா நிறுவனம் தனது 300 சிசி வாகனங்கள் மீது இனி கவனத்தை செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.இனி 100-125 சிசி இன்ஜிஜ் கொண்ட வாகனங்களில் புதிய வாகனங்களின் அறிமுகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. யமஹா தனது ஆர்எக்ஸ் 100 பைக்கை அப்டேட் செய்து புதிதாக வெளியிடும் என பலர் எதிர்பார்த்த நிலையில் இந்த ஏமாற்றமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
யமஹா நிறுவனம் டூவீலர் தயாரிப்பில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் சிறப்பான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்வதில் மக்களின் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் வாகனத்தின் மீது மக்களுக்கு பெரும் ஆசையும் நம்பிக்கையும் இருக்கும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்நிறுவனம் இனி 300 சிசிக்கு அதிகமான இன்ஜின் கொண்ட வாகனங்களில் தான் சிறப்பு கவனத்தை செலுத்தும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துளு்ளது. 100-125 சிசி செக்மெண்டில் புதிய வாகனங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளது. தற்போது 125சிசி மற்றும் 150 சிசி இன்ஜின் கொண்ட வாகன்ஙகளை அந்நிறுவனம் ஸ்கூட்டர் செக்மெண்டில் விற்பனை செய்து வரும் நிலையில் அதிலும் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.
100-125 சிசி செக்மெண்டில் தான் ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் மொத்தம் விற்பனையாகும் வாகனங்களில் 80 சதவீதமான வாகனங்கள் இந்த செக்மெண்டில் உள்ள வாகனங்களாவே உள்ளன. இந்த செக்மெண்டில் ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் இருக்கம் நிலையில் இந்த நிறுவனங்களுடன் இந்த செக்மெண்டில் போட்டி போட வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


மாறாக 300 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களை அதிகம் அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளது. டெனரே 700, எம்டி-07, ஆர்7 உள்ளிட்ட மிட்வெயிட் வாகனங்களை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக யமஹா நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் பிரிமியம் மாடல்கள் தான் ஹிட்டாகியள்ள நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால் யமஹா நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து சிறிய ரக வாகனங்களை தயாரிக்கும். இந்த வாகனங்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள் என 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்க ஏற்றுமதி செய்து வருகிறது.
யமஹா நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பில் கவனத்தை குறித்து ஷோரூம்களில் வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் அனுபவம் கிடைக்கும் வகையில் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. யமஹா வாடிக்கையாளர்களுக்கு பிரிமியமான சேவை கிடைக்கவும் இந்நிறுவனம் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் யமஹா பிரிமியம் பிராண்டாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பில் இருக்கும் நிலையில் இந்நிறுவனம் அந்த பைக்கை தற்போது உள்ள கண்டிஷன்களுக்கு ஏற்ப தயாரித்து விற்பனைக்கு கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









