ஆர்15,எஃப் இசட் விற்பனையை முந்திய ஸ்கூட்டர்! நம்பர் 1 விற்பனை இது தான்!

யமஹா நிறுவனத்தின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. மாதாந்திர விற்பனை வளர்ச்சியிலும் சரி வருடாந்திர விற்பனை வளர்ச்சியிலும் சரி நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யமஹா நிறவனம் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 73,307 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 66705 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 9.90 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 60,413 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 21.34 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

Yamaha Sales Breakup Sept 2025

இதில் யமஹா ரே இசட் ஆர் ஸ்கூட்டர் தான் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது கடந்த செப்டம்பர் மாதம் 27,280 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 16,542 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கூடுதலாக 10,738 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 64.91 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 20,671 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 6609 வாகனங்கள் விற்பனையாகி 31.97 சதவீத விற்பனை பதிவாகியுள்ளது.

யமஹா எஃப் இசட் பைக்கை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 16137 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13617 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கூடுதலாக 2520 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது18.51 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 14323 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 1814 வாகனங்கள் விற்பனையாகி 12.66 சதவீத வளர்ச்சி விற்பனை பதிவாகியுள்ளது.

Yamaha Sales Breakup Sept 2025

யமஹா எம்டி15 பைக்கை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 11,695 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 12286 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 591 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 4.81 சதவீத வீழ்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 10613 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 1082வாகனங்கள் விற்பனையாகி 10.20 சதவீத விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 9329 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 10614 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 1285 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது12.11 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 14323 வாாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 1814 வாகனங்கள் விற்பனையாகி 12.66 சதவீத விற்பனை பதிவாகியுள்ளது.

Yamaha Sales Breakup Sept 2025

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 5955 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 11491 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 5536 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 48.18 சதவீத விற்பனை வீழ்ச்சியசாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 4849 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 1106 வாகனங்கள் விற்பனையாகி 22.81 சதவீத விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது.

யமஹா ஏராக்ஸ் பைக்கை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 2901 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 2142 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கூடுதலாக 759 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 18.51 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 2424 வாாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 477 வாகனங்கள் விற்பனையாகி 19.68 சதவீத விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது.

யமஹா ஆர்3/எம்டி03 பைக்கை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 10 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. 3 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 23.08 சதவீத வீழ்ச்சியாகும். இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 4 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது தற்போது கூடுதலாக 6 வாகனங்கள் விற்பனையாகி 150 சதவீத விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்று ஓட்டு மொத்த விற்பனையில் வருடாந்திர அடிப்படையிலும் மாதாந்திர அடிப்படையிலும் வளர்ச்சியை பெற்றுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு கிடைத்த வரவேற்பு தான். ஜிஎஸ்டி வரிகுறைப்பால் கடந்த செப்டம்பரில் நல்ல விற்பனை பதிவாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 8:35 [IST]
English summary
Yamaha sales breakup sept 2025 model wise report
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X