நான்கு கண்கள் கொண்ட மிருகம் போலிருக்கும் பைக்கை இந்தியாவில் காட்சிப்படுத்திய யமஹா.. இது விற்பனைக்கு வருமா!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) இந்தியாவில் தொடங்கிவிட்டது. இந்த உலக புகழ்பெற்ற மேடையைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களின் புதிய வாகன மாடல்களைக் காட்சிப்படுத்தி உள்ளன. அந்தவகையில், யமஹா நிறுவனமும் அதன் அசத்தலான தயாரிப்புகள் சிலவற்றை அங்கு காட்சிப்படுத்தியுள்ளது. அந்தவகையில், யமஹா டெனரே 700 (Yamaha Tenere 700) பைக் மாடலையும் அது காட்சிப்படுத்தியது. இந்த மோட்டார்சைக்கிள் பொதுவெளியில் காட்சிப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.

முதலில் இத்தாலி மிலன்-இல் நடைபெற்ற இஐசிஎம்ஏ 2024-லேயே இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, தற்போது இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவிலும் அந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. யமஹா நிறுவனம் டெனரே 700 பைக்கில் 698 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது.

Yamaha tenere 700 showcased at bharat mobility global expo 2025

இந்த எஞ்சினே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான எம்டி 09 (MT 09) பைக் மாடலிலும் யமஹா பயன்படுத்தி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 72.4 பிஎச்பி மற்றும் 68 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்சின் உடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. பைக்கின் சிறந்த இயக்க அனுபவத்திற்காக ரைடு-பை-வயர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் இயக்கத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு எக்ஸ்ப்ளோரர் (Explorer) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகிய இரண்டு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Yamaha tenere 700 side view

தொடர்ந்து, சௌகரியமான ரைடுக்காக இந்த பைக்கில் அட்ஜெஸ்டபிள் 43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் ப்கத்திலும், 200 மிமீ உயரம் கொண்ட மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பாதுகாப்பான பயண அனுபவத்திற்காக இந்த பைக்கின் முன் பக்கத்தில் இரண்டு 282 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்குகள், 245 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட பைரல்லி ஸ்கார்பியன் டயர்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது கரடு-முரடான மற்றும் பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. யமஹா நிறுவனம் இந்த பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது தெரியவில்லை. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் மிகப் பெரிய வரவேற்பை இந்த பைக் டூ-வீலர் காதலர்களிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Yamaha tenere 700 handle bar

இதற்கேற்ப மிகவும் தனித்துவமான லுக்கை இந்த பைக் மாடல் கொண்டிருக்கின்றது. நான்கு கண்களைக் கொண்ட மிருகம் போன்ற லைட்டிங் அமைப்பு, உயரமான விண்ட் ஸ்கிரீன், புதிய ஸ்டைலிலான ஹேண்டில் பார், மெல்லிய இன்டிகேட்டர் லைட் மற்றும் கவர்ச்சியான உடல் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், மார்க்கெட்டில் பலரின் கவனத்தைக் கவரக் கூடிய இரண்டு சக்கர வாகனமாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாக தன்னுடைய முக்கிய தயாரிப்புகள் சிலவற்றை அது காட்சிப்படுத்தி இருக்கின்றது. விரைவில் இதில் இருந்து சில மாடல்களை அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 12:21 [IST]
English summary
Yamaha tenere 700 showcased at bharat mobility global expo 2025 a game changer adventure motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X