யமஹா நீ நல்லா இருக்கணும்யா.. மின்சாரம்-பெட்ரோலில் இயங்கும் பைக் ரெடி.. மைலேஜை சும்மா அள்ளி தரும்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) நிறுவன கார்களில் வழங்கப்படுவதைப் போல ஹைபிரிட் (Hybrid) டெக்னாலஜியை பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் பைக்கில் வழங்கி இருக்கின்றது. யமஹா (Yamaha)-வே அந்த நிறுவனம் ஆகும். தன்னுடைய புதுமுக பைக் மாடலிலேயே இந்த அதிக எரிபொருள் சிக்கனத்தைச் செய்து, மைலேஜை வாரி வழங்கும் டெக்னாலஜியை வழங்கி இருக்கின்றது. புதிய ஸ்டைலில் தயார் செய்யப்பட்டு இருக்கும் எம்டி 09 (MT 09) பைக் மாடலிலேயே ஹைபிரிட் டெக்னாலஜி வழங்கப்பட்டு இருக்கின்றது.

முன் மாதிரி (Prototype) மாடலாக மட்டுமே இப்போது இந்த பைக்கை யமஹா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், சீக்கிரமே விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக இந்த பைக்கின் உற்பத்தி பணிகளை அது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது இந்த எம்டி 09 ஹைபிரிட் பைக் மாடலை அது உலக அளவில் வெளியீடு செய்திருக்கின்றது.

Yamaha mt-09 hybrid prototype unveiled

இந்த பைக்கின் சிறப்பு என்னவென்றால், அது ஐசிஇ (எரிபொருளில் இயங்கும் எஞ்சின்) மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டையும் கொண்டிருக்கும். ஆகையால், ஹைபிரிட் கார்களைப் போலவே யமஹாவின் இந்த பைக் எரிபொருள் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும். இதுமட்டுமல்ல குறைந்த அளவு மாசையே இது வெளிப்படுத்தும்.

எனவே இந்த பைக்கிற்கு சுற்றுச்சூழலை அதிகம் நேசிப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் மத்தியில் மட்டுமல்ல அதிக மைலேஜை விரும்புவோர் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பலாம். ஏனெனில் அந்த அளவிற்கு அதிக மைலேஜை வழங்கக் கூடியதே ஹைபிரிட் வகை வாகனங்கள் ஆகும்.

Yamaha mt-09 hybrid bike engine

ஆனால், இந்த பைக்கின் துள்ளியமான மைலேஜ் விபரங்கள் பற்றிய தகவலை யமஹா நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், வழக்கமான இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 60 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என நம்பப்படுகின்றது. யமஹா நிறுவனம் ஏற்கனவே இந்த ஹைபிரிட் அம்சத்தை ஸ்கூட்டர்களில் வழங்கத் தொடங்கிவிட்டது.

இதற்கு அடுத்தபடியாகவே இப்போது பைக்குகளிலும் அது அந்த அம்சத்தை வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த பைக் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவிலேயே அதுபற்றிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும்? என்ன விலையில் விற்பனைக்கு வரும்? எந்தெந்த உலக நாடுகளில் அது விற்பனக்கு வரும் என்பது போன்ற விபரங்களையே விரைவில் யமஹா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Yamaha mt-09 hybrid prototype bike

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்கள் உலக சந்தையில் நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகின்றது. இந்தியாவில் இந்த அம்சம் கொண்ட கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹைபிரிட் டெக்னாலஜியை தன்னுடைய பைக்கில் அறிமுகம் செய்யும் பணியில் யமஹா களமிறங்கி இருக்கின்றது.

இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனில் நிச்சாயம் மாபெரும் கூட்டத்தை தன் பின்னால் இந்த பைக் வளைத்துப் போடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்கேற்ப அதன் ஸ்டைலும் உள்ளது. இந்த பைக்கை அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாக மட்டுமே தயார் செய்யவில்லை. கவர்ச்சியான தோற்றத்தைத் தாங்கியதாகவும் தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2025, 15:16 [IST]
English summary
Yamaha unveils mt 09 hybrid prototype featuring advanced sphev technology
மேலும்... #yamaha #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X