இனி ரோடு ஃபுல்லா இந்த வண்டி தான் ஓடப்போகுது! யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 டெலிவரி ஸ்டார்ட் ஆகிடுச்சு!

யமஹா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் டெலிவரிகள் தற்போது இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த பைக்குகளை டெலிவரி எடுக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவர துவங்கிவிட்டனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யமஹா நிறவனம் எக்ஸ்எஸ்ஆர் 155 என்ற பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக் ரூ1.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் ரூ1.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, டிவிஎஸ் ரோனின் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ளது.

Yamaha XSR 155 Delivery

இந்த பைக் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டே சர்வதேச அளவில் அறிமுகமாகிவிட்டது.இது ஆர்15 பைக்கை அடிப்படையாக கொண்ட பைக் ஆகும். இந்தபைக் இந்தியாவிற்கு வரும் முன்னரே இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான பைக்காக இருந்தது.இந்தியாவிற்கு எந்த பைக் வரும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் இந்த பைக்கை அந்நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த பைக் நியோ ரெட்ரோ ஸ்டைலிங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளுது. முழுமையான எல்இடி லைட்டிங் செட்டப் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் சுஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும் இதில் டுயல் சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் உள்ளது.

Yamaha XSR 155 Delivery

இந்த யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 155 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இது வேரியபிள் வால்வு அக்யூசேசன் என்ற தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த இன்ஜின் 18.1 பிஎச்பி பவர் மற்றும் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உரவாக்கப்பட்டுள்ளுது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஃஜின் டெல்டா பாக்ஸ் ஃபிரேமில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் சன்பென்சன் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் டுயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 17 இன்ச் அலாய் வீல் உடன் இணைக்கப்பட்டு ட்யூப்லெஸ் டயர்களும்வழங்கப்பட்டுள்ளன.

Yamaha XSR 155 Delivery

இந்த பைக்கின் டெலிவரிகள் தற்போது இந்தியாவில் துவங்கியுள்ளது. பலர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த பைக்கின் விற்பனை துவங்கியதால் பலர் இந்த பைக்கை புக்கிங் செய்து வருகின்றனர். விரைவில் ஏகப்பட்ட பைக்குகளை இந்த சாலையில் பார்க்கலாம். இந்த பைக் நிச்சயம் மார்கெட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா நிறுவனத்திற்கு என்று இந்தியாவில் தனி பெயர் இருக்கிறது. இதற்காகவே இந்த பைக் சிறப்பாக விற்பனையாகும். என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பைக் மார்கெட்டில் நல்ல விற்பனையை பெற்றால் இந்த செக்மெண்டில் மேலும் பல பைக்குகள் வரும் என எதிர்பார்க்கலாம். இதனால் இந்த செக்மெண்ட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.இந்த பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆர்15 பைக் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ள நிலையில் இந்த பைக்கும் நிச்சயம் நல்ல பிரபலமாகி விற்பனை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 16, 2025, 11:00 [IST]
English summary
Yamaha xsr 155 delivery starts in india commence updates
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X