எலெக்ட்ரிக்கில் ஸ்கூட்டர்ஸ் இருப்பதுதான் நிறைய பேருக்கு தெரியும்! 2025இன் டாப் சாய்ஸஸ்!

இந்தியாவில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தை அடைந்த வரவேற்பைப் போல, எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மார்க்கெட் இன்னும் பெரிய ஈர்ப்பைப் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகமான அம்சங்களையும், செயல்திறனையும் எதிர்பார்ப்பதால், அவற்றின் விற்பனை எண்ணிக்கையும் சற்று குறைவாகவே உள்ளது.

இருப்பினும், சிறந்த அம்சங்கள், ரேஞ்ச் (Range), நடைமுறை பயன்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய எலெக்ட்ரிக் பைக்குகளை சில முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றன. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவடையும் தருவாயில் உள்ள 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த எலெக்ட்ரிக் பைக்குகளின் பட்டியல் இதோ...

most popular electric bikes of 2025

ஓலா ரோட்ஸ்டர் (Ola Roadster): ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கான ரோட்ஸ்டரை கடந்த 2025 பிப்ரவரி 5 அன்று அறிமுகப்படுத்தியது. ஆனால், ஓலா ஸ்கூட்டர்களைப் போல இது இன்னும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வலுவான வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், இது அன்றாட பயன்பாட்டிற்கான பெட்ரோல் பைக்குகளுக்கு இணையாக ஈர்க்கக்கூடிய அம்சங்களையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.04 லட்சம் ஆகும்.

most popular electric bikes of 2025

ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV 400): இந்தியாவில் ஆரம்ப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றான ரிவோல்ட் ஆர்வி400, இன்றும் மிகவும் பிரபலமான அன்றாட பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் பைக்குகளில் ஒன்றாக திகழ்கிறது. பைக்கில் இருந்து நீக்கக்கூடிய 3.24 kWh பேட்டரி பேக்குடன் வரும் இந்த இ-பைக் ஈக்கோ (Eco) மோடில் 150 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. இதன் மோட்டார் அதிகப்பட்சமாக 4.1 kW வரையிலான ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதன் விலை சுமார் ரூ.1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

most popular electric bikes of 2025

அல்ட்ராவயலட் எக்ஸ்47 கிராஸ்ஓவர் (Ultraviolette X47 Crossover): இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், வேகமான இயக்கத்தையும், பலதரப்பட்ட நிலப்பரப்புகளை கையாளும் திறன்களையும் ஒருங்கே கொண்ட ஒரு கிராஸ்ஓவர் பைக்காகும். அல்ட்ராவயலட் நிறுவனம் அதன் முதன்மை மோட்டார்சைக்கிளான எஃப்77-இல் இருந்து பல பிரீமியம் தொழில்நுட்பங்களை எக்ஸ்47 பைக்கில் பயன்படுத்தியுள்ளது. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் போன்ற உயரமான அமைப்பை கொண்ட இந்த இ-பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.49 லட்சம் ஆகும்.

most popular electric bikes of 2025

ஓபன் ரோர் (Oben Rorr): ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் வடிவமைப்பு, செயல்திறன், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வாரண்டி ஆகியவற்றை சிறந்த கலவையாக வழங்கும் இந்த நியோ-கிளாசிக் ஸ்டைல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது சிறந்த சௌகரியத்தையும் ரைடிங் அனுபவத்தையும், தினசரி நகர பயணத்திற்கு ஏற்ற ரைடிங் பொசிஷன் உடன் ARX ஃபிரேமை கொண்டுள்ளது.

most popular electric bikes of 2025

அல்ட்ராவயலட் எஃப்77 (Ultraviolette F77): 2025ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக அல்ட்ராவயலட் எஃப்77 எங்கள் தேர்வாகும். ஏனெனில் இது இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. 2025இல் பல வெளிநாடுகளில் அறிமுகமாகி, அந்த நாடுகளின் ஆட்டோமொபைல் விமர்சகர்களிடம் இருந்தும் எஃப்77 பாராட்டுகளை பெற்றுள்ளது. மேக் 2 (Mach 2) மற்றும் சூப்பர்ஸ்ட்ரீட் (Superstreet) என இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.2.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் இன்னமும் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு பெரிய அளவில் மார்க்கெட் விரிவடையவில்லை. அந்த நிலை, இந்த 2025ஆம் ஆண்டில் ஓரளவிற்கு மாறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சில இவி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் புதிய எலெக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன; சில நிறுவனங்கள் இந்த ஆண்டில் இருந்து அறிமுகத்திற்கு தயாராக ஆரம்பித்துள்ளன. இதனால், 2026ஆம் ஆண்டில் பல புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகங்களை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 29, 2025, 22:49 [IST]
English summary
Year ender 2025 currently most popular electric bikes in india ultraviolette f77 and oben rorr
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X