வெறும் ரூ10,000 செலவில் பெட்ரோல் ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றலாம்!
இன்று மார்கெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க செலவு குறைவாக இருப்பது தான். இதனால் புதிதாக வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு ஆப்ஷனாக பார்க்கின்றனர். அதே நேரம் பெட்ரோல் ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்ற முடியுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அவர்களுக்க விளக்கம் அளிக்கும் வகையி்ல தான் இந்த பதிவை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
ஸ்கூட்டர் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சிட்டிக்குள் பயணம் செய்ய பலர் ஸ்கூட்டரை வாங்கி வருகின்றனர். இது டிரைவ் செய்ய சுலபமாக இருக்கிறது. இது போக டிராஃபிக் நிறைந்த சாலைகளில் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி பயணிப்பதற்கு வசதியாக இருப்பதால் மக்கள் பலர் இந்த ரக வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர். இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஓலா, டிவிஎஸ், ஏத்தர் உள்ளிட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றனர்.

மக்கள் அதிகம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்த முக்கியமான காரணம் அதற்கு வரும் குறைவான செலவு தான். பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அதிகம் பெட்ரோலுக்கு செலவு வைக்கின்றன. அதே நேரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான பாராமரிப்பு செலவும் அதிகம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட விலை அதிகமாக இருந்தாலும், இந்த செலவுகளை கணக்கிட்டு பார்க்கும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லாபமாக இருக்கிறது.
இதனால் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்பி வாங்கி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயன்படுத்தும் பலர் தனது ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றலாமா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இது பலருக்கும் சந்தேகமான மற்றும் குழப்பமான விஷயமாக இருக்கிறது. அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் இப்படி மாற்ற அரசு அங்காரம் பெற்ற கிட்களே உள்ளன.
பெங்களூருவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களா மாறறும் டிரெண்ட் அதிகரித்து வருகிறது. இந்தியன் ஆயில் மற்றும சன் மொபிலிட்டி நிறுவனம் இணைந்து இண்டோ ஃபாஸ்ட் எனர்ஜி என்ற நிறுவனம் மூலம் ஏஆர்ஏஐ சான்று பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிட்களை வழங்கி வருகிறது. வெறும் ரூ10, 000 என்ற விலையில் இந்த கிட்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.
இந்த கிட்களை தற்போது பயன்பாட்டில் உள்ள ஹோண்டா ஆக்டிவா, ஏவியேட்டர், டியோ, கிளிக், சுஸூகி ஆக்ஸஸ், ஸ்விஸ், டிவிஎஸ் ஜூபிடர் , வீகோ, யமஹா ஃபேஸினோ உள்ளிட்ட வாகனங்களில் பொருத்த முடியும்.அந்த வாகனங்களில் உள்ள பெட்ரோல் இன்ஜின் உள்ளிட்ட பாகங்களை கழற்றிவிட்டு அதற்கு பதிலாக ஸ்வாப்பபிள் பேட்டரி பொருத்தக்கூடிய கிட்களை பொருத்தினால் பெட்ரோல் ஸ்கூட்டர்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக மாற்றலாம்.
இதில் உள்ள ஸ்வாப்பிள் பேட்டரியை பெங்களூருவில் உள்ள 900 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனில் மாற்றிக்கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் வாகனத்தின் பதிவையும் பெட்ரோல் வாகனத்திலிருந்து எலெக்ட்ரிக் வானமாக மாற்றிக்கொள்ள முடியும். இன்சூரன்ஸ் விஷயத்திலும் இதில் பல்வேறு பலன்கள் கிடைக்கும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால் ரூ1.2 முதல் ரூ1.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியது வரும். ஆனால் இந்த கிட்களை பொருத்துவதன் மூலம் ரூ80,000 மிச்சம் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக்டிவா உள்ளிட்ட 11 பெட்ரோல் ஸ்கூட்டர்களை வெறும் ரூ10,000 செலவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றும் டிரெண்ட் தற்போது அதிகமாக வருகிறது. மக்கள் பலர் இந்த மாற்றத்தை செய்ய துவங்கிவிட்டனர். தற்போது பெங்களூருவில் அதிக அளவில் இருக்கும் இந்த டிரெண்ட் விரைவில் மற்ற நகரங்களிலும் காணமுடியும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








