லைசன்ஸ் எல்லாம் தேவையே இல்ல... இந்த ஸ்கூட்டரை ஓட்டினு போய் போலீஸ் புடிச்சா கூட சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்!
எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜெலியோ இ-மொபிலிட்டி (Zelio E-Mobility), தனது வளர்ச்சியில் ஆண்டுதோறும் இரு மடங்காக முன்னேறி வருகிறது. தற்போது, இந்த நிறுவனம் தனது ஈவா (Eeva) ஸ்கூட்டர் வரிசையில் மூன்று மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் குறை-வேக (டாப்-ஸ்பீடு மணிக்கு 25கிமீ) எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்தி உள்ளது.
இதன்படி, ஜெலியோ இ-மொபிலிட்டியின் ஈவா ஸ்கூட்டர்கள் வரிசையில் புதிய ஈவா இகோ எல்.எக்ஸ் (Eco LX), ஈவா இகோ இசட்.எக்ஸ் (Eco ZX) மற்றும் மேம்படுத்தப்பட்ட ஈவா இசட்.எக்ஸ் பிளஸ் (ZX Plus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், நகரப் பயணங்களுக்குத் தேவையான செயல்திறன், வசதி மற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

ஈவா இகோ எல்.எக்ஸ்: இது அன்றாட நகரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இது 48/60V BLDC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு முழு சார்ஜுக்கு 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே எடுத்துக்கொண்டு, 60-90 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என ஜெலியோ தெரிவித்துள்ளது. 48-60V/32Ah GEL அல்லது 60V/30Ah லித்தியம் பேட்டரி உடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.
இந்த ஸ்கூட்டரில் இருபுறமும் டிரம் பிரேக்குகள், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் மற்றும் 3.00-10 இன்ச் டயர்கள் உள்ளன. இது நிலையான, வசதியான நகரப் பயணங்களுக்கு உகந்தது. மேலும், இருக்கைக்கு அடியில் 36 லிட்டர் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி, உறுதியான சேஸிஸ் மற்றும் கண்ட்ரோலர் உடன் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பளபளப்பான கருப்பு, சாம்பல், சிவப்பு மற்றும் நீல நிற ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம். இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.51,551/- (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

ஈவா இகோ இசட்.எக்ஸ்: இது, தனித்துவமான ஸ்டைலிங் மேம்படுத்தல்களையும், மேம்படுத்தப்பட்ட தோற்றத்தையும் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். மேலே கூறப்பட்ட எல்.எக்ஸ் ஸ்கூட்டரின் அதே 48/60V BLDC மோட்டார், சிங்கிள்-முழு சார்ஜுக்கு 60- 90 கிமீ தூர பயணம் மற்றும் 1.5 யூனிட்/சார்ஜ் நுகர்வு திறன் ஆகியவை இதிலிலும் தொடர்கிறது. 12- 32Ah GEL அல்லது 60V/30Ah லித்தியம் பேட்டரி ஆப்ஷனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.
மேலும், இந்த இகோ இசட்.எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிரம் பிரேக்குகள், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் மற்றும் 90-90/12 (முன் சக்கரம்) & 90-100/10 (பின் சக்கரம்) அளவுள்ள டயர்கள் உள்ளன. இது சிறந்த சாலைப் பிடிமானம் மற்றும் கண்ட்ரோல் ஆகியவற்றை வழங்குகிறது. பளபளப்பான கருப்பு, சாம்பல், சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிற ஆப்ஷன்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.53,551/- (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

ஈவா இசட்.எக்ஸ் (ஃபேஸ்லிஃப்ட்): மேம்படுத்தப்பட்ட ஈவா இசட்.எக்ஸ், 60/72V BLDC மோட்டார் மற்றும் 12- 32Ah/42Ah GEL அல்லது 60V/30Ah- 72V/32Ah லித்தியம் பேட்டரி உடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இது ஒரு முழு சார்ஜுக்கு 1.5 யூனிட் மின்சாரத்தில் 60- 90 கிமீ தூரம் வரையிலான பயணத்தை வழங்குகிறது.
ஈவா இசட்.எக்ஸ் ஸ்கூட்டரில் முன்பு வழங்கப்படாத முன்புறத்தில் டிஸ்க் பிரேக் & பின்புறத்தில் டிரம் பிரேக், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் மற்றும் இரு சக்கரங்களிலும் 90-90/12 டயர்கள் உள்ளிட்டவை இப்போது வழங்கப்பட்டுள்ளன. இது பிரேக்கிங் நம்பிக்கையையும், பயண சௌகரியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், பளபளப்பான கருப்பு, பொன்னிறம், சிவப்பு, மேட் நீலம் மற்றும் பளபளப்பான வெள்ளை போன்ற புதிய கலர் ஆப்ஷன்களுடன் ஈவா இசட்.எக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர் புதிய, பிரீமியம் தோற்றத்துடன் உறுதியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.65,051/- (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஈவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இளைய தலைமுறையினர், பெண் பயனர்கள் மற்றும் பாதுகாப்பான, நடைமுறைக்கு உகந்த மற்றும் சிக்கனமான போக்குவரத்தை விரும்பும் குடும்பங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள ஜெலியோ நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் கிடைக்கின்றன. இதற்கான முன்பதிவுகளும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டன. இந்த குறை-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டாப்-ஸ்பீடு 25kmph மட்டுமே என்பதால், இவற்றை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை.


Click it and Unblock the Notifications









