ஓட்ட லைசன்ஸ் தேவையில்ல, ரூ.54 ஆயிரம் மட்டும்தான் விலை... இந்த ஸ்கூட்டரை வாங்க இதைவிட என்ன காரணம் வேணும்?

ஜீலியோ இ மொபிலிட்டி (ZELIO E Mobility), இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதில் வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவைப்படாத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், டிரைவிங் லைசன்ஸ் (Driving License) இல்லாமல் ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 25கிமீ மட்டும் ஆகவே இருக்கும்.

அத்தகைய குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஜீலியோ இ மொபிலிட்டி நிறுவனத்தில் இருந்து கிரேசி+ (Gracy+) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Facelift Upgrade) வெர்சன் தான் தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

zelio e mobility launches gracy electric scooter

அதாவது, கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்படுதிறன், பயண சவுகரியம் மற்றும் மற்ற முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களில் அப்டேட்களை கொண்டுவந்து தற்போது ஜீலியோ நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லித்தியம்-இரும்பு பேட்டரி அல்லது ஜெல் (Gel) பேட்டரி உடன் வாங்கலாம்.

இதில், லித்தியம்-இரும்பு பேட்டரி ஆனது 60 வோல்ட்/ 30 ஆம்பியர் மற்றும் 74 வோல்ட்/ 32 ஆம்பியர் என இரு விதமான திறன்களில் கிடைக்கும். இதில், 60 வோல்ட்/ 30 ஆம்பியர் பேட்டரியில் 110கிமீ வரையிலான ரேஞ்சையும், 74 வோல்ட்/ 32 ஆம்பியர் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 130கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம்.

Lithium-Ion Battery Capacity Price Range
60V/ 30AH INR 65,000 110km
74V/ 32AH INR 69,500 130km
zelio e mobility launches gracy electric scooter

60 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் புதிய கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.65 ஆயிரமாகவும், 74 வோல்ட் பேட்டரி உடன் ரூ.69 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெல் பேட்டரியை பொறுத்தவரையில், இது 60 வோல்ட்/32 ஆம்பியர், 60 வோல்ட்/42 ஆம்பியர், 72 வோல்ட்/32 ஆம்பியர் மற்றும் 72 வோல்ட்/42 ஆம்பியர் என நான்கு விதமான திறன்களில் கிடைக்கும். இவற்றின் ரேஞ்ச் மற்றும் விலையை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Gel Battery Capacity Price Range
60V/ 32AH INR 54,000 80km
60V/ 42AH INR 58,000 100km
72V/ 32AH INR 56,500 100km
72V/ 42AH INR 61,000 130km

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி BLDC மோட்டாரில் பொருத்தப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல், ஜீலியோ இ மொபிலிட்டியின் கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 25கிமீ மட்டுமே ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச ரேஞ்ச் 130கிமீ ஆகும். அதாவது, திறன்மிக்க பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 130கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

முந்தைய கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில், புதிய மாடலில் தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதி சற்று கூடுதல் உயரமாக 180மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. 88 கிலோ எடை கொண்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 150 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லலாம். லித்தியம்-இரும்பு பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4 மணிநேரங்களும், ஜெல் பேட்டரியை சார்ஜ் நிரப்ப 8இல் இருந்து 12 மணிநேரமும் தேவைப்படும் என ஜீலியோ இ மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பை விட கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜீலியோ இ மொபிலிட்டி நிறுவனம் சிறப்பாகவே அப்கிரேட் செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகளையும், குடும்ப மகளிரையும், முதியவர்களையும் டார்க்கெட் செய்து கிரேசி+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜீலியோ நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளது. ஓட்டுவதற்கு டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை என்பதுதான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

Source: Zelio E Mobility/ Press Release

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2025, 19:42 [IST]
English summary
Zelio e mobility launches new gracy plus electric scooter price features all details here
மேலும்... #electric scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+