ஒரு டீ குடிக்கற காசுல 120 கிமீ ஓட்டலாம்! செல்போனை விட குறைவான விலையில் களமிறங்கிய புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி கொண்டிருப்பதற்கு இதுவே முதன்மையான காரணமாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு உள்ளதால், தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்திய சந்தையில் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், ஜீலியோ இ மொபிலிட்டி (ZELIO E Mobility) நிறுவனமும் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் இவா (Eeva) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.
இதில், டிஜிட்டல் டிஸ்ப்ளே, பார்க்கிங் கியர் மற்றும் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் ப்ளூ, க்ரே, ஒயிட் மற்றும் பிளாக் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் (Colour Options), 2025 இவா ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

2025 இவா ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜெல் பேட்டரி மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஜெல் பேட்டரி மாடலின் 60V/32AH வேரியண்ட்டின் விலை வெறும் 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) 80 கிலோ மீட்டர்கள் ஆகும்.
அதே நேரத்தில் ஜெல் பேட்டரி மாடலின் 72V/42AH வேரியண்ட்டின் விலை 54 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் 100 கிலோ மீட்டர்கள் ஆகும். மறுபக்கம் லித்தியம் அயான் பேட்டரி மாடலின் 60V/30AH வேரியண்ட்டின் விலை 64 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் ரைடிங் ரேஞ்ச் 90-100 கிலோ மீட்டர்கள் வரை ஆகும். அதே நேரத்தில் லித்தியம் அயான் பேட்டரி மாடலின் 74V/32AH வேரியண்ட்டின் விலை 69 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் 120 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில செல்போன்களின் விலையை காட்டிலும், 2025 இவா ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்குவதற்கான செலவும் கூட மிகவும் குறைவுதான். அதாவது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு வெறும் 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்ப ஒரு யூனிட்டிற்கான மின் கட்டணம் மாறுபடும். ஒருவேளை நீங்கள் 101-200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவராக இருந்தால், ஒரு யூனிட்டிற்கான கட்டணம் 4.5 ரூபாய் ஆகும். அப்படியானால் 2025 இவா ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கு தோராயமாக 6.75 ரூபாய் மட்டுமே செலவாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலையும், இயக்குவதற்கான செலவும் குறைவாக இருக்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், உணவு டெலிவரி போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








