சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ஓடும்! விலை வெறும் 54 ஆயிரம்தானா! பெட்ரோல் ஸ்கூட்டர்களின் கதையை முடிக்க போறாங்க!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) டிமாண்ட் அதிக அளவில் உள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், ஜூலியோ இ மொபிலிட்டி (Zelio E Mobility) நிறுவனமும் ஒன்றாகும்.

ஜூலியோ இ மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில், கிரேஸிஐ (Gracyi) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனை ஜூலியோ இ மொபிலிட்டி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Zelio Gracyi Facelift

புதிய கிரேஸிஐ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். இதில், 60V/32Ah ஜெல் பேட்டரி வேரியண்ட் ஒன்றாகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 80-90 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இதன் விலை வெறும் 54 ஆயிரம் ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்றொரு வேரியண்ட்டில், 72V/42Ah ஜெல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 130-140 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இதன் விலை வெறும் 58,500 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Zelio Gracyi Facelift EV

மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் 60V/30Ah லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 90-100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இதன் விலை 66 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே ஜூலியோ இ மொபிலிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மற்றும் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஜூலியோ இ மொபிலிட்டி நிறுவனத்திற்கு தற்போதைய நிலையில் 400க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் உள்ளன.

இருப்பினும் இந்த எண்ணிக்கையை நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக 1,000 என்ற அளவில் உயர்த்துவதற்கு ஜூலியோ இ மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே ஆஃப்டர் சேல்ஸ் சப்போர்ட் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியது கிடையாது.

ஜூலியோ கிரேஸிஐ ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்ற சந்தேகம் உங்களுக்கு இங்கே வரலாம். இதன் லித்தியம் அயான் பேட்டரி வேரியண்ட்டை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். அதே நேரத்தில் ஜெல் பேட்டரி வேரியண்ட்களை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும்.

ஜூலியோ கிரேஸிஐ ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வசதியையும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. வெள்ளை, கருப்பு, வெள்ளை/கருப்பு, மஞ்சள்/நீலம் மற்றும் கருப்பு/சிகப்பு என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், ஓரளவிற்கு நல்ல ரைடிங் ரேஞ்ச் வழங்க கூடிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜூலியோ கிரேஸிஐ ஃபேஸ்லிஃப்ட் நல்ல ஆப்ஷன். கல்லூரி மாணவர்கள், தினமும் அலுவலகம் சென்று வருவோர் மற்றும் உணவு/பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் போன்றவர்கள், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 14:44 [IST]
English summary
Zelio gracyi facelift electric scooter launched in india check all details here
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+