150 கிமீ போறதுக்கு வெறும் 7 ரூபாதான் செலவாகுமா! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட போகும் விலை குறைவான ஸ்கூட்டர்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், ஜூலியோ (ZELIO) நிறுவனமும் ஒன்றாகும்.

இது இந்தியாவை சேர்ந்த மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜூலியோ நிறுவனம் இந்திய சந்தையில் லெஜெண்டர் (Legender) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. தற்போது லெஜெண்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, ஜூலியோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ZELIO Legender

ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு கிடைக்கும். இதில், 32AH ஜெல் பேட்டரி வேரியண்ட் ஒன்றாகும். இதன் விலை (Price) 65 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 60V/30A லித்தியம் அயான் பேட்டரி வேரியண்ட் ஒன்றும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 75 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது மற்றும் கடைசி வேரியண்ட் 74V/32A லித்தியம் அயான் பேட்டரி வேரியண்ட் ஆகும். இதன் விலை 79 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ZELIO Legender Facelift

அப்படி ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால், 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என ஜூலியோ நிறுவனம் கூறியுள்ளது. இது மிகவும் சிறப்பான ரைடிங் ரேஞ்ச் (Riding Range) ஆக கருதப்படுகிறது. அத்துடன் ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இயக்குவதற்கு மிகவும் குறைவாக மட்டுமே செலவு ஆகும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு, 1.5 யூனிட் மின்சாரம் செலவு ஆகும். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டிற்கான கட்டணம் 4.80 ரூபாயாக மட்டுமே உள்ளது.

எனவே ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 7.20 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இந்த 7.20 ரூபாய் செலவில், 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்பதால், ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், மிகவும் சிக்கமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆரஞ்ச், க்ரீன் மற்றும் க்ரே என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் பகுதிகளில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 12 இன்ச் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் டேஷ்போர்டு, கீலெஸ் எண்ட்ரி, செல்போன் சார்ஜர், பார்க் அஸிஸ்ட், ஃபாலோ மீ ஹோம் லைட்கள் ஆகிய வசதிகளும் (Features), ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறலாம் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜூலியோ லெஜெண்டர் ஃபேஸ்லிஃப்ட் நல்ல ஆப்ஷன். விலை குறைவு என்பதுடன், இயக்குவதற்கான செலவும் மிக குறைவு என்பது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2025, 13:52 [IST]
English summary
Zelio legender facelift electric scooter launched in india price range features
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+