லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவையில்ல! கம்மி ரேட்ல இப்படி ஒரு வண்டி வரப்போகுதா?

ஸீலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் தனது லெஜெண்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த திட்டிடம்டு வருகிறது. இந்த அப்டேட்டில் அந்நிறுவனம் புதிய வடிவமைப்பு, கலர் ஆப்ஷன்கள், மற்றும் புதிய அம்சங்களை சேர்க்கவுள்ளது. இதன் மூலம் குறைந்த வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹிசார் என்ற நிறுவனம் ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் 3 வீலர்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஸீலியோ என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகும் லெஜெண்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த அப்டேட் வெர்ஷன் வரும் ஜூலை மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zelio Legender Facelift

இந்த லெஜெண்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60/72 வோல்ட் பிஎல்டிசி மோட்டார் மொத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 1.5 யூனிட் கரெண்ட் தான் செலவாகும். இந்த வாகனத்தை தினசரி பயன்பாட்டிற்காக சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த வாகனம் அதிகபட்சம் 25 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த வாகனம் அதிக நம்பகதன்மை கொண்டதாகவும், அதே நேரம் குறைவான செலவில் பயணிக்க ஏற்றதாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Zelio Legender Facelift

புதிதாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்படும் வெர்ஷனில் புதிய கிராஃபிக்ஸ்கள், ஸ்லீக்கான பாடி ஸ்டைலிங், டைனமிக் ஸ்போர்ட்டி டிசைன் என இளைஞர்களை கவரும் வகையில் அப்டேட்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அப்டேட் செய்யப்படும் மாடல்களில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், திருடு போவதை தடுக்கும் அலாரம் பார்க்கிங் கியர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

இந்த வாகனத்தில் முன்பக்கம் 12 இன்ச் அலாய் வீலும், பின்பக்கம் 10 இன்ச் அலாய் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மூத்தான ரைடிங் அனுபவம் கிடைக்கும். பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும். பின்பக்கம் டிரம்பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

ஸீலியோ இ மொபிலிட்டி பிராண்டில் ஏகப்பட்ட ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இந்த பிராண்ட் மீது நம்பிக்கை வைத்து சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வாகன்ஙகளை வாங்கியள்ளனர். இந்தியா முழுவதும் சுமார் 400 டீலர்ஷிப்கள் மூலம் இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 2025ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்குள் 1000 டீலர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸீலியோ இ-மொபிலிட்டி பைக்குகள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இதனால் இதன் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக இருக்கிறது. இந்த அப்டேட்டிற்கு பிறகு இந்த வாகனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டில் குறைந்த வேகத்தில் இயக்கும் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகும் நிலையில் இந்த ஸ்கூட்டருக்கு மவுசு அதிகரிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 17:00 [IST]
English summary
Zelio legender facelift likely to be launched in july
மேலும்... #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+