கார்களையே தூக்கி சாப்பிடும் புது ஸ்கூட்டர்! வெறும் 59 ஆயிரம்தானா! போட்டி நிறுவனங்களை கதிகலங்க வெச்சுட்டாங்க!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இதில், ஜீலோ எலெக்ட்ரிக் (ZELO ELECTRIC) நிறுவனமும் ஒன்று.

இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது நைட் ப்ளஸ் (Knight+) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, ஜீலோ எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 1.8 kWh போர்ட்டபிள் எல்எஃப்பி பேட்டரியை (Battery) இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

ZELO Knight Plus Electric Scooter

இதன் ரியல் வேர்ல்டு ரேஞ்ச் (Real World Range), 100 கிலோ மீட்டர்கள் என, ஜீலோ எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

1.5 kW மோட்டாரை (Motor) கொண்டுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு (Top Speed) மணிக்கு 55 கிலோ மீட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீலோ எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நைட் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் விலை குறைவானது ஆகும்.

ZELO Knight Plus

இருப்பினும் தற்போதைய மாடர்ன் கார்களில் இருப்பதை போன்ற ஏராளமான அதிநவீன வசதிகளை (Features) எல்லாம், ஜீலோ நைட் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இதில், க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். இதில், 2 கலர் ஆப்ஷன்கள், சிங்கிள் டோன். அவை க்ளோஸி ஒயிட் மற்றும் க்ளோஸி பிளாக் ஆகும்.

எஞ்சிய 4 கலர் ஆப்ஷன்கள், ட்யூயல் டோன் ஆகும். அவை வெள்ளை உடன் மேட் ப்ளூ, வெள்ளை உடன் மேட் ரெட், வெள்ளை உடன் மேட் யெல்லோ மற்றும் வெள்ளை உடன் மேட் க்ரே ஆகியவை ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஜீலோ நைட் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெறும் 59,990 ரூபாய் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அறிமுக சலுகை விலை (Introductory Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஜீலோ நைட் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கருதப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Booking) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. டெலிவரி (Delivery) பணிகள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில செல்போன்களை விட குறைவான விலையில், ஜீலோ நைட் ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறைவான விலையில் அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் சிறப்பான ஒரு ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 17:37 [IST]
English summary
Zelo knight plus electric scooter launched in india price features delivery details
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+