பஜாஜ் ஷோரூம்களில் கம்பீரமாக புது பல்சர் பைக்! வாங்கும் பிளானில் இல்லாதவர்கள் கூட வாங்கிட்டு போக போறாங்க!!

புதிய முகப்பு பகுதி, கிராபிக்ஸ் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்த பஜாஜ் பல்சர் 150 (Bajaj Pulsar 150) பைக்கைப் போலவே, தற்போது அதன் சிறிய மாடலான பல்சர் 125 பைக்கிற்கும் அதே மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே, புதிய 2026 பஜாஜ் பல்சர் 125 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.

பஜாஜ் ஆட்டோவின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு வரிசைகளில் பல்சர் 220, பல்சர் 150 மற்றும் பல்சர் 125 ஆகிய பைக்குகள் முக்கியமானவை ஆகும். நேக்கட் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டும் கலந்த கலவையான பல்சர் 220 பைக்கிற்கு இன்னும் எந்த மேம்பாடுகளும் வழங்கப்படவில்லை. ஆனால், பல்சர் 150-க்கு கடந்த டிசம்பர் மாதம் புதிய முகப்புடன் முழுமையான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Upgrade) வழங்கப்பட்டது.

2026 bajaj pulsar 125 bikes at dealership showrooms

இந்த நிலையில், இந்த மாற்றங்கள் பல்சர் பைக்குகளின் சிறிய மாடலான 125-க்கும் வழங்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட 2026 பல்சர் 125 பைக், திருத்தப்பட்ட ஹெட்லைட் அமைப்புடன் கூடிய புதிய முகப்புப் பகுதியைப் பெறுகிறது. இதில் முதல்முறையாக LED ஹெட்லைட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது முந்தைய மாடலை விட நவீனத் தோற்றத்தை அளிக்கிறது.

'மெஷின் ரூல்ஸ்' (Machine Rules) என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஷோரூம் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புதிய 2026 பல்சர் 125 மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய ஹைலைட்கள் துல்லியமாக காட்டப்பட்டுள்ளன. முக்கியமாக, டர்ன் இண்டிகேட்டர்களும்கூட இப்போது LED-யாக மாறியுள்ளன, இது பல்சர் 125-க்கு அதிக பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

2026 bajaj pulsar 125 bikes at dealership showrooms

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இருந்துவரும் LED டெயில் லைட்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பாடி பேனல்கள் மற்றும் என்ஜின் கவுல் ஆகியவற்றில் புதிய கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளன. இவை வாகனத்திற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன. இருப்பினும், 2026 பல்சர் 150 பைக்கைப் போல் அல்லாமல், புதுப்பிக்கப்பட்ட பல்சர் 125-ல் இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் பின் இருக்கை பயணி பிடித்துக் கொள்வதற்கான கம்பி இல்லை.

அதாவது, இவை ஒரே துண்டாக வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தின் அடிப்பாகத்தைப் பொறுத்தவரை, 2026 பஜாஜ் பல்சர் 125 பைக்கில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் ட்வின்-ஷாக் அப்சார்பர்களும், 17-இன்ச் அலாய் சக்கரங்களும் புதிய பல்சர் 125 பைக்கிலும் தொடர்கின்றன.

2026 bajaj pulsar 125 bikes at dealership showrooms

அதேபோன்று இந்த பைக் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக், பின் சக்கரத்தில் டிரம் பிரேக் மற்றும் கிளிப்-ஆன் ஹேண்டில்பார்களைப் பெற்றுள்ளது. மேலும், ஒளிரும் ஸ்விட்ச்கியர், கிக் ஸ்டார்ட்டர், இடது பக்க ஸ்விட்ச்கியரில் சரியான ஃப்ளாஷர், என்ஜின் கில் ஸ்விட்ச், பிரேக் லீவர் கவர் போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் உள்ளன.

ப்ளூடூத் இணைப்புடன் கூடிய அதே முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை தக்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி இதில் இல்லை. 2026 பஜாஜ் பல்சர் 125 பைக்கிற்கு அதே ட்வின்-ஸ்பார்க், சிங்கிள்-சிலிண்டர் 124.38சிசி ஏர்-கூல்ட் SOHC 2-வால்வு/சிலிண்டர் என்ஜின் சக்தி அளிக்கிறது. இதே என்ஜின் தான் முந்தைய மாடலிலும் இருந்தது.

2026 bajaj pulsar 125 bikes at dealership showrooms

இந்த என்ஜின் அதிகபட்சமாக 11.8 பிஎஸ் ஆற்றலையும், 10.8 என்.எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விற்பனையில் பல்சர் 125 பைக் ஆனது ஹோண்டா எஸ்பி125 (Honda SP125) மற்றும் ஹீரோ கிளாமர் எக்ஸ் (Hero Glamour X) போன்ற பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலமான பல்சர் பைக்குகளை இவ்வாறு வருடந்தோறும் மறக்காமல் அப்கிரேட் செய்வதை பஜாஜ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. தற்போது புதிய பல்சர் 125 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதால், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவிரி (Delivery) செய்யப்படும். பெரியதாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, விலைகள் அறிவிக்கப்பட்டு 2026 பல்சர் 125 பைக்கை பஜாஜ் அறிமுகம் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2026, 5:00 [IST]
English summary
2026 bajaj pulsar 125 bikes starts to arrive dealership showrooms check all details here
மேலும்... #bajaj auto #bajaj pulsar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X