விலையை பார்த்து ஏமாறாதீங்க... இரண்டையும் 160சிசி பைக்னு தான் விற்குறாங்க!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து புதியதாக 2026 பல்சர் என்160 பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் இருந்த பல்சர் என்160 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தில் மாற்றங்களுடனும், புதிய தொழிற்நுட்ப அம்சங்களுடனும் மேம்படுத்தப்பட்டுள்ள பல்சர் என்160 ஆனது விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் எஸ்பி160 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்குகிறது.
இந்திய பைக் மார்க்கெட்டில் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு உள்ள வரவேற்பை போன்று, ஹோண்டாவின் 'எஸ்பி' பெயரும் பிரபலமானது ஆகும். பல வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஹோண்டா எஸ்பி160 பைக்கிற்கும், மாடர்ன் பல்சர் பைக்குகளுள் ஒன்றான என்160 மாடலுக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தோற்றம்: பல்சர் என்160 ஆனது பல்சர் பைக்குகளுக்கே உண்டான ஸ்போர்டியான தோற்றத்தில், முரட்டுத்தனமான ரைடிங் பொசிஷனை கொண்டுள்ளது. இருப்பினும், ஓட்டுபவருக்கு முதுகு வலி ஏற்படக்கூடிய அளவிற்கு ரைடிங் பொசிஷன் இல்லை. மறுப்பக்கம், ஹோண்டா எஸ்பி160 ஆனது மார்க்கெட்டில் பிரபலமான எஸ்பி125 பைக்கின் பரிணாம வளர்ச்சியாக காட்சியளிக்கிறது.
என்ஜின் & கியர்பாக்ஸ்: இந்த இரு பைக்குகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான 160சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. ஆனால், பல்சர் மாடலில் அதிக இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இதனால், என்160 ஆனது நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக விளங்குகிறது. இரு பைக்குகளிலும் வழங்கப்படுவது, ஒரே மாதிரியான ஏர் கூல்டு என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகும்.
| Specification | 2026 Bajaj Pulsar N160 | Honda SP 160 |
| Engine | 164.82cc, Single cylinder, 2 Valve | 162.71cc, Single cylinder |
| Power | 16 PS @ 8750 rpm | 13.18 PS @ 7500 rpm |
| Torque | 14.65 Nm @ 6750 rpm | 14.8 Nm @ 5250 rpm |
| Gearbox | 5 Speed | 5 Speed |
| Cooling Type | Air Cooled | Air Cooled |

பரிமாண அளவுகள்: 2026 பல்சர் என்160 பைக்கின் நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட அளவுகள் இன்னும் துல்லியமாக கிடைக்கப் பெறவில்லை. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது இரு பைக்குகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரம் எஸ்பி160 பைக்கில் அதிகமாக உள்ளது. எடையில், எஸ்பி160 பைக்கை காட்டிலும் பல்சர் என்160 எடைமிக்கதாக உள்ளது.
| Dimension / Specification | 2026 Bajaj Pulsar N160 | Honda SP 160 |
| Length | - | 2061 mm |
| Width | - | 786 mm |
| Height | - | 1100 mm |
| Wheelbase | 1348 mm | 1347 mm |
| Ground Clearance | 165 mm | 177 mm |
| Kerb Weight | 152 kg | 138 kg |
| Seat Height | 795 mm | 796 mm |
| Fuel Tank Capacity | 14 L | 12 L |
மெக்கானிக்கல் பாகங்கள்: இந்த இரு பைக்குகளிலும் அடிப்படையான சேசிஸ் ஆனது வெவ்வேறு விதமானவை ஆகும். அதேபோல், முன்பக்க சஸ்பென்ஷனும் இரண்டிலும் மாறுப்படுகிறது. பல்சர் மாடலில் பிரீமியம் தரத்திலான யுஎஸ்டி ஃபோர்க்குகள் தங்க நிறத்திலும், எஸ்பி160 பைக்கில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும் வழங்கப்படுகின்றன. ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டம் ஆனது எஸ்பி160 பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ஆகவும், பல்சர் என்160 பைக்கில் டபுள்-சேனல் ஏபிஎஸ் ஆகவும் வழங்கப்படுகிறது.
| Chassis & Hardware | 2026 Bajaj Pulsar N160 | Honda SP 160 |
| Frame | Tubular | Diamond Type |
| Front Suspension | 37mm Golden USD Forks | Telescopic |
| Rear Suspension | Monoshock | Monoshock |
| Brakes (Front/Rear) | 300mm / 230mm Disc | 276mm / 220mm Disc |
| Tyres (Tubeless) | 100/80-17, 130/70-17 | 100/80-17, 130/70-17 |
| Wheels | 17 Inch Alloys | 17 Inch Alloys |
| ABS | Dual Channel with Ride Modes | Single Channel (Front) |
தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்த இரு பைக்குகளுமே ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் சப்போர்ட் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்ட மாடர்ன் வசதிகளை கொண்டுள்ளன. ஆனால், புதிய மேம்படுத்தப்பட்டுள்ள பல்சர் என்160 பைக்கில் இரு விதமாக செயல்படக்கூடிய எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட், மல்டிபிள் ஏபிஎஸ் ரைடு மோட்கள், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் டபுள்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை கூடுதலாக கிடைக்கும்.
| Features & Technology | 2026 Bajaj Pulsar N160 | Honda SP 160 |
| Lighting | Bi-Functional LED Projector Headlamp, Eye-Shaped DRLs, LED Tail Light | All LED Setup |
| Instrument Cluster | LCD Display | TFT Meter Console with Auto Dimming |
| Connectivity & Controls | Turn-by-Turn Navigation, Call Accept & Reject Function | Honda RoadSync Connectivity, Call, Message & Music Control, Turn-by-Turn Navigation, Voice Command |
| Rider Aids & Safety | ABS Ride Modes (Rain, Road, Off-Road), Dual-Channel ABS | Engine Stop Switch, Hazard Switch |
| Transmission Tech | Assist and Slipper Clutch | - |
| Charging & Ports | USB Type-A Port | 15W USB Type-C Port |
| Smart Information | - | Real-Time Weather Updates, Riding Data |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையில் இந்த இரு 160சிசி பைக்குகளுக்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லை. இருப்பினும், டபுள்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைப்பது பல்சர் என்160 பைக்கிற்கு கூடுதல் பலம் ஆகும். அதுமட்டுமின்றி, சஸ்பென்ஷனுக்கு யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்படுவதும் புதிய 2026 பல்சர் என்160 பைக்கை வாங்குபவர்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
| Model / Variant | Price (Ex-Showroom) |
| 2026 Bajaj Pulsar N160 (USD Model) | ₹ 1.24 Lakh |
| Honda SP 160 (Single Disc) | ₹ 1.15 Lakh |
ஆதலால், மாடர்னான அம்சங்களுடன் ஸ்டைலிஷான 160சிசி பைக்கை எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினரை இந்த பல்சர் பைக் ஈர்க்கும். அதேநேரம், ஹோண்டா எஸ்பி160 ஆனது அதிக வருடங்களுக்கு நீடித்து உழைக்கக்கூடிய நம்பகமான பைக்காக விளங்குவதால், பெரியதாக ஸ்டைலை விரும்பாமல் ஹோண்டா பிராண்ட் மீதான நம்பிக்கையில் பைக்கை வாங்க விரும்பும் அன்றாட வாகன ஓட்டிகளை தொடர்ந்து ஈர்க்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications