ஃபார்ச்சூனர் காரின் விலையில் புதிய டுகாட்டி பைக்! இதன் என்ஜினை வைத்து ஒரு காரையே ஓட வைக்கலாம்!

இந்திய அட்வென்ச்சர் பைக் பிரியர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் வகையில், இத்தாலிய சொகுசு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி (Ducati), தனது புதிய 2026 மல்டிஸ்ட்ராடா வி4 ராலி (2026 Multistrada V4 Rally) பைக்கை இந்திய சந்தையில் ஜூன் 30ஆம் தேதியான இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அதிநவீன அட்வென்ச்சர் டூரர் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.32.40 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஆனது டுகாட்டி சிவப்பு நிறத்தில் இந்த பைக்கை வாங்கும்போது ஆகும். அதுவே, ஜெட் பச்சை நிறத்தில் ரூ.32.73 லட்சம் ஆகும். இவ்வாறு இரு அசத்தலான வண்ணங்களில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ducati multistrada v4 rally launched

கடந்த 2025 அக்டோபரில் சர்வதேச சந்தைகளில் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த டுகாட்டி பைக், இப்போது பல புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இந்திய சாலைகளுக்கு வந்துள்ளது. இந்த பைக்கில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? 2026 டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ராலி பைக்கின் இதயப் பகுதியில் அதிவலிமை வாய்ந்த 1,158சிசி வி4 கிராண்டுரிஸ்மோ (V4 Granturismo) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-இல் சுமார் 170 ஹெச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-இல் 123 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கக்கூடியது ஆகும். பைக் சும்மா நிற்கும் போதும் அல்லது குறைந்த வேகத்தில் செல்லும் போதும், பின்னாலுள்ள சிலிண்டரை தற்காலிகமாக அணைத்து வைக்கும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் (rear-cylinder deactivation) இதில் வழங்கப்பட்டுள்ளது.

ducati multistrada v4 rally launched

இது என்ஜின் வெப்பத்தைக் குறைப்பதுடன் எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கும். கரடுமுரடான பாதைகளை எளிதாக கையாள, இந்த பைக்கில் புதிய அடாப்டிவ் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் (DSS) எவோ சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் செல்லும் சாலையின் தன்மை மற்றும் ஓட்டும் முறைக்கு ஏற்ப இந்த சஸ்பென்ஷன் தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.

மேலும், 70 சென்சார்களைக் கொண்ட டுகாட்டி வைக்கிள் அப்சர்வர் (DVO) தொழில்நுட்பம் ஆனது இதில் இருக்கும் கார்னரிங் ABS மற்றும் வீலி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளை மிகத் துல்லியமாகச் செயல்படுத்த உதவுகிறது. நீண்ட தூர சாகசப் பயணங்களை மிகவும் சொகுசாக மாற்ற, இந்த பைக்கில் ஸ்போக் சக்கரங்கள் முன்பக்கத்தில் 19-இன்ச்சிலும், பின்பக்கத்தில் 17-இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் சிறந்த பிடிமானம் தரும் பிரெல்லீ ஸ்கார்பியன் ட்ரைல் II டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மூலமாக டயர்களின் காற்றழுத்தத்தை நாம் நிகழ்நேரத்தில் எளிதாகக் கண்காணிக்க முடியும் என்பதும் கூடுதல் பலம். இதன் சேசிஸ் பகுதியில், ஸ்விங்கார்ம் பிவோட் சற்று உயர்த்தப்பட்டுள்ளதுடன், பின்பக்க பிரேக் டிஸ்க்கின் அளவானது 280மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயரமான அட்வென்ச்சர் பைக்குகளைக் கையாள்வதில் உள்ள சிரமத்தைப் போக்க, இந்த பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஆட்டோமேட்டிக் லோவரிங் டிவைஸ்' (Automatic Lowering Device) உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஏனெனில் இது, பைக் மணிக்கு 10 கிமீ-க்கும் குறைவான வேகத்தில் செல்லும்போது ரைடர் இருக்கையின் உயரத்தை தானாகவே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைக்கிறது. பின்னர், சாதாரண சாலையில் 50 கிமீ வேகத்தைக் கடக்கும் போதோ அல்லது ஆஃப்-ரோடில் 20 கிமீ வேகத்தில் செல்லும் போதோ பழைய உயரத்திற்குத் தானாகவே மாறிவிடும்.

இவற்றுடன், அதிகக் காற்று நம் மீது படுவதைத் தடுக்க இந்த பைக்கின் விண்ட்ஸ்கிரீன் இப்போது 40மிமீ அகலமாகவும், 20மிமீ உயரமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் ரேடார் அமைப்பில் முன்பக்க மோதலைத் தடுக்கும் சிக்னல் (Forward Collision Warning), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட்டை அடையாளம் காணுதல் போன்ற மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலும், இந்த புதிய டுகாட்டி பைக்கில் குளிர்கால சவாரிகளுக்கு வசதியாக, ஐந்து விதமான வெப்ப நிலைகளைக் கொண்ட ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சென்டர் ஸ்டாண்ட் ஆகியவையும் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஆதலால், புதிய மல்டிஸ்ட்ராடா வி4 ராலி பைக் ஆனது நிச்சயமாக எவரொருவரையும் ஈர்க்கக் கூடியது ஆகும். ஆனால் இதன் விலை தான் கொஞ்சம் தலை சுற்ற வைக்கிறது.

Article Corrections

முன்பு கொடுக்கப்பட்ட படங்கள் நீக்கப்பட்டு, புதிய படங்கள் சிறந்தவையாக மாற்றப்பட்டன.
Article Published On: Tuesday, June 30, 2026, 23:59 [IST]
English summary
2026 ducati multistrada v4 rally motorcycle launched in india
மேலும்... #ducati #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out