மாருதி ஆல்டோ காரின் விலையில் புதிய கவாஸாகி பைக்... இன்று முதல் புக்கிங் துவக்கம்!

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் (IKM) நிறுவனம் அதன் புதிய மை26 நின்ஜா 500 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நின்ஜா 500 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பானிய பைக் நிறுவனமான கவாஸாகி இந்தியாவில் அவ்வப்போது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் அதேநேரம் பழைய பைக்குகளை விற்பனையில் இருந்து நிறுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாகி எலிமினேட்டர் மற்றும் நின்ஜா 500 பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

2026 kawasaki ninja 500 launch

இந்த நிலையில், நின்ஜா 500 பைக்கை 2026ஆம் ஆண்டிற்காக அப்கிரேட் செய்து கவாஸாகி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்கிரேடாக பைக்கிற்கு புதிய நிறத்தை தவிர்த்து வேறெந்த அப்கிரேட்களும் வழங்கப்படவில்லை. இதன்படி, 'லைம் க்ரீன்' என்கிற கவாஸாகி பைக்குகளுக்கே உண்டான பச்சை நிறத்தை நின்ஜா 500 பெற்றுள்ளது.

2026 நின்ஜா 500 பைக்கிற்கான முன்பதிவுகள் தற்போது நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவிரிகள் மிக விரைவாகவே இந்த ஜூன் மாதத்திற்கு உள்ளாகவே துவங்கப்பட உள்ளது. புதிய லைம் க்ரீன் நிறம் நின்ஜா 500 பைக்கின் சூப்பர்ஸ்போர்ட் ஸ்டைலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அன்றாட போக்குவரத்திற்கு பயன்படுத்தவும், அதேநேரம் ரேஸ் பைக்குகளை போன்று ஸ்போர்டியான பெர்ஃபார்மன்ஸை கொண்டதாகவும் நின்ஜா 500 விளங்குகிறது.

2026 kawasaki ninja 500 launch

இதற்கேற்ப, எளிதில் ஹேண்ட்லிங் செய்யக்கூடிய வகையில் குறைவான எடையில் உருவாக்கப்படும் இந்த பைக்கில் டபுள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. மேலும், மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்படுகின்றன. பிரீமியம் தரத்திலான தோற்றத்தை கொண்டிருக்கும் நின்ஜா 500 பைக்கில் 451சிசி லிக்யுடு-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 45 பிஎஸ் மற்றும் 42.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. குறைவான மற்றும் மிட்-ரேஞ்ச் வேகத்தில் இயங்கும்போதும் அதிகமான டார்க் திறனை வழங்கும் இந்த என்ஜின் மூலம் மென்மையான ஆக்ஸலரேஷனை இந்த பைக்கில் பெறலாம்.

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட பேக்லிங்க் ஸ்விங்கார்மும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், நின்ஜா பைக்குகளுக்கே உண்டான ஸ்டைலில் இருக்கும் 2026 நின்ஜா 500 பைக்கின் முன்பக்கத்தில் வழக்கம்போல் ட்வின் LED ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு இன்றைய கால ரைடர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் இந்த பைக்கில் பெறலாம். அத்துடன், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் தொழிற்நுட்பமும் சவுகரியமான பயணம் மற்றும் ஜாலியான ரைடிங்கிற்காக இடம்பெற்றுள்ளது. எடை குறைவான ட்ரெல்லிஸ் ஃபிரேமில் உருவாக்கப்படும் இந்த பைக்கை எளிதாக ஹேண்ட்லிங் செய்யவும், வளைவுகளில் திருப்பும்போது பைக்கின் செயல்படுதிறனை கணிக்கவும் முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகியின் மிடில்வெயிட் நின்ஜா மோட்டார்சைக்கிளாக விளங்கும் நின்ஜா 500 இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட சில நாட்களிலேயே புதிய நிறத்துடன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கவாஸாகியின் அடையாளமான பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நின்ஜா 500 பைக்கின் விற்பனை வரும் மாதங்களில் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Tuesday, June 16, 2026, 21:33 [IST]
English summary
2026 kawasaki ninja 500 launched in india price features and new colour option details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out