சுஸுகி ஆக்ஸஸை விட எந்த விதத்திலும் சளைத்தது இல்ல! 1 லட்சத்தில் இருந்து துவங்கும் விலை!

2026 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125) ஆனது ஏற்கனவே விற்பனையில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் 125 (Access 125) ஸ்கூட்டரின் மேம்பட்ட பிரீமியம் மேக்ஸி-ஸ்டைல் ஸ்கூட்டராக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஆக்ஸஸை விட அதிக அம்சங்களுடன், மேம்பட்ட பயண அனுபவத்தையும் சற்று அதிக விலையில் வழங்குகிறது.

இந்த இரு சுஸுகி ஸ்கூட்டர்களுக்கும் 124சிசி என்ஜின் பொதுவானதாக இருந்தாலும், பர்க்மேன் இலகுவான மற்றும் உறுதியான சேசிஸ் உடன், நவீன 4.2-இன்ச் வண்ண TFT டிஸ்ப்ளேவையும் பெறுகிறது. விலையில், ஆக்ஸஸ் (சுமார் ரூ.81,455) ஸ்கூட்டரைக் காட்டிலும், புதிய 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் (சுமார் ரூ.1,01,944) குறிப்பிடத்தக்க அளவில் விலை அதிகம்.

2026 suzuki burgman street 125 vs access 125

இதற்கேற்ப செயல்திறனைப் பொறுத்தவரை, பர்க்மேன் ஆக்ஸஸை விட சற்று அதிக ஆற்றலை அளிக்கிறது. தொழில்நுட்ப மேம்பாடுகளில், சுஸுகி ரைடு கனெக்ட் செயலி மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உடன் கூடிய 4.2-இன்ச் கனெக்டட் TFT டிஸ்ப்ளே பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் உள்ளது; அதுவே ஆக்ஸஸ் எளிமையான டிஜிட்டல் கன்சோல் திரையை பயன்படுத்துகிறது.

புதிய பர்க்மேனின் சேசிஸ் ஆனது ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் இருந்து பெறப்பட்டு இருப்பினும் 500 கிராம் இலகுவாகவும், 25% அதிக உறுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த ஹேண்ட்லிங்கையும், மென்மையான பயணத்தையும் இது உறுதி செய்கிறது. வடிவமைப்பில், 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இரட்டை எல்இடி ஹெட்லைட்களை முன்பக்கத்தில் கொண்டுள்ளது.

2026 suzuki burgman street 125 vs access 125

அவற்றுடன், பெரிய முன்பக்க அப்ரன் மற்றும் படிக்கட்டு போன்றதான டிசைனில் நீண்ட இருக்கையுடன் தனித்துவமான மேக்ஸி-ஸ்கூட்டர் தோற்றத்தைக் கொண்டுள்ள 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது. ஆக்ஸஸ் 125 தனது கிளாசிக் மற்றும் நவீன ரெட்ரோ தோற்றத்துடன் மெல்லியதான உடலமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில், ரிமோட் சாவி உடன் கூடிய கீலெஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது, இது ஸ்கூட்டரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்யும் வசதியை கூட்டுகிறது.

இருக்கைக்குக் கீழ் வழங்கப்படும் ஸ்டோரேஜ் இடவசதியில் பர்க்மேன் ஸ்ட்ரீட் (24.5- 24.6 லிட்டர்) ஆனது ஆக்ஸஸை (21.8 லிட்டர்) விட அதிக இடவசதியை வழங்குகிறது. பிரேக்கிங் அமைப்பில், பர்க்மேனில் முன்புறம் டிஸ்க் பிரேக்குடன் சிபிஎஸ் (CBS) வசதி உள்ளது. அதேவேளையில் ஆக்ஸஸ் சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் (ABS) ஆப்ஷன்களை வழங்குகிறது.

பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் (EX) ஸ்கூட்டரில் முன்புறம் மற்றும் பின்புறம் 12 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, ஆனால் ஆக்ஸஸில் முன்புறம் 12 அங்குலமும் பின்புறம் 10 அங்குலமும் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரு ஸ்கூட்டர்களிலும் இருக்கையை திறக்காமல் எரிபொருள் நிரப்ப வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்கிற்கான மூடி இடம்பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் சுஸுகி ஆக்ஸஸ் முதன்மையானது ஆகும். அந்த அளவிற்கு பிரபலமான 125சிசி ஸ்கூட்டராக ஆக்ஸஸ் விளங்கும் போதிலும், கூடுதல் ஸ்டைலிஷான ஸ்கூட்டரை எதிர்பார்ப்போருக்காக அதே 125சிசி என்ஜின் உடன் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை சுஸுகி அறிமுகப்படுத்தியது. இந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் தான் தற்போது 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுஸுகி ஆக்ஸஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 இந்த இரண்டில் எதை வாங்குவது என குழம்புவோர், கூடுதல் ஸ்டைலான ஸ்கூட்டரை சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்க தயார் என்றால், பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 பக்கம் செல்லலாம். அதுவே, அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப, அடிக்கடி அதிக பொருட்களை ஃப்ளோர்போர்டில் வைத்து கொண்டுச்செல்ல ஆக்ஸஸ் 125 ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 6:14 [IST]
English summary
2026 suzuki burgman street 125 vs access 125 check full scooters comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+