பவர்ஃபுல்லான இன்ஜினுடன் புதிய யமஹா பைக் வெளியானது.. பவர் தாறுமாறா இருக்கு!

யமஹா நிறுவனமானது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட R25 பைக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இல்லை மலேசியாவில். 2026ம் ஆண்டிற்காக அப்டேட்டாக இந்த 250 சிசி பைக்கிற்கு புதிய நிறங்களைக் கொடுத்துள்ளது யமஹா. அப்டேட் செய்யப்பட்ட புதிய R25 பைக் எப்படி இருக்கிறது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் யமஹாவின் R சீரிஸ் மிகவும் பிரபலமான ஒரு பைக் லைன்-அப்பாக இருந்து வருகிறது. இந்தியாவில் அந்த வரிசையில் 150 சிசி இன்ஜின் கொண்ட R15 பைக் மட்டுமே நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இளைஞர்கள் மிகவும் விரும்பும் ஒரு பைக் மாடலாகவும் இது இருந்து வருகிறது.

2026 Yamaha R25

ஆனால் இந்த 150 சிசி பைக்கைத் தவிர்த்து, 125 சிசி முதல் 1000 சிசி வரை பல்வேறு வகையிலான இன்ஜின்களுடன் விதவிதமான R சீரிஸ் பைக்குகளை யமஹா உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இதில் R15, R25, R7 மற்றும் R1 ஆகிய R சீரிஸ் பைக் மாடல்கள் மலேசியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் R25 பைக் மாடலை தற்போது அப்டேட் செய்துள்ளது.

மேலே கூறியிருப்பது போல இரண்டு புதிய நிறங்களை 2026ம் ஆண்டிற்கான அப்டேட்டாக R25 பைக்கிற்குக் கொடுத்துள்ளது யமஹா. ஐகான் ப்ளூ மற்றும் மின்ட் கிரீன் ஆகிய இரண்டு தனித்துவமான நிறங்களை புதிய R25 பைக் கொண்டுள்ளது. இதில் ஐகான் ப்ளூ என்பது இந்தியாவில் R15 பைக் கொண்டிருக்கும் ரேஸிங் ப்ளூ நிறம் தான். மின்ட் கிரீன் நிறம் ஃபங்கியான ஒன்று, இந்தியாவில் எந்த யமஹா பைக்கிலும் அந்த நிறம் கொடுக்கப்படவில்லை.

2026 Yamaha R25

மின்ட் கிரீன் நிற R25 மாடலில், பைக் முழுவதும் லைட் கிரீன் நிறத்தலா அலங்கரிக்கப்பட்டிருப்பதோடு, பிளாக் மற்றும் ரெட் கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். பார்த்தவுடன் எவரொருவரையும் ஒரு கணம் நின்று பார்க்க வைக்கும் வகையிலான நிறம் இது. ஃபிளாஷியான நிறம் வேண்டும் எனக் கேட்டும் வாடிக்கையாளர்களுக்காக இந்த மின்ட் கிரீன் நிறத்தை புதிய R25 பைக்கில் கொடுத்திருக்கிறது யமஹா.

இந்தப் புதிய நிறங்களைத் தவிர வசதிகள் ரீதியாகவோ, மெக்கானிக்கலாகவோ புதிய R25 பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் 249 சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 34.9 hp பவர் மற்றும் 22.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் குறைவான விலையில் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக் மாடல் என்றால் அது ராயல் என்ஃபீல்டின் 650 சிசி லைன்-அப்பில் இருந்தே தொடங்குகிறது. யமஹாவும் R3 மற்றும் MT-03 ஆகிய ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. ஆனால் அதிக விலையிலான குறைவான வரவேற்பு காரணமாக இந்த பைக்குகளை விற்பனையில் இருந்து நிறுத்திவிட்டது.

அதிக விலைக்கு, இந்த பைக்குகளை நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததும் முக்கியக் காரணம். இந்தியாவிலேயே ட்வின் சிலிண்டர் இன்ஜினைத் தயாரிக்க, போதுமான வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்குவார்கள் என்ற நம்பிக்கை நிறுவனங்களிடம் இல்லை. எனவே இந்த R25 பைக்கும் இந்தியாவிற்கு வராது என்றே தெரிகிறது. தெற்காசிய சந்தைகளிலேயே இந்த பைக்கை பிரத்தியேகமாக யமஹா தொடர்ந்து விற்பனை செய்யும் என்றே தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: R25 பைக் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படவில்லை என்றாலும், R25 பைக்கிற்கு புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கும் மின்ட் கிரீன் நிறத்தை இந்தியாவிற்கும் யமஹா கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதே எங்களின் கருத்தாக இருக்கிறது. MT-15 பைக்கை இது போல ஃபங்கியான நிறங்களுடன் பார்த்திருக்கிறோம், R15 பைக்கிற்கும் இது போல ஒரு சில நிறங்களை யமஹா கொடுக்கலாம்.

Article Published On: Sunday, May 3, 2026, 8:56 [IST]
English summary
2026 yamaha r25 sport bike launched with few updates check all details here
மேலும்... #yamaha #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+