தேர்தல் வாக்குப்பதிவுக்கு மத்தியில் களமிறக்கப்படும் புதிய யெஸ்டி பைக் இதுதான்! மக்களின் ஆதரவு கிடைக்குமா?
யெஸ்டி (Yezdi) பிராண்டில் இருந்து நாளை (ஏப்ரல் 23) புதிய 'ஸ்க்ராம்ப்ளர்' (Scrambler) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்க்ராம்ப்ளர் பைக் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டு நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, புதிய யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்த யெஸ்டி பிராண்டில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் களமிறக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான், ஸ்க்ராம்ப்ளர் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டு வருடக்கணக்கில் ஆகிவிட்டதால், ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடலை அப்கிரேட் செய்ய யெஸ்டி பிராண்ட் தயாராகி வருகிறது.

அதன்படி, ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்க்ராம்ப்ளரில் விரிவான அப்கிரேட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் யெஸ்டி பைக்குகளை கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரின் எடை (182 கிலோ) அதிகமாக உள்ளதாக பலர் புகார் தெரிவித்துள்ளதால், புதிய ஸ்க்ராம்ப்ளரின் எடையை குறைவாக கொண்டுவரலாம். இதற்காக எடை குறைவான பாகங்களை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்த பைக்கின் உற்பத்தியில் பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது பைக்கின் எடையை குறைப்பது மட்டுமின்றி, பைக்கை ஹேண்ட்லிங் மற்றும் கண்ட்ரோல் செய்வதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இதனுடன், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் தொழிற்நுட்ப வசதிகளையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் விரிவுப்படுத்தலாம். ஏனெனில், இந்த பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440 (Royal Enfield Scram 440) மற்றும் டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Triumph Scrambler 400 X) பைக்குகள் தொழிற்நுட்ப அம்சங்களில் சிறந்து விளங்குகின்றன.
ஆகையால், அவற்றின் போட்டியை எதிர்கொள்ள வேண்டுமெனில் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரிலும் அதற்கு இணையான தொழிற்நுட்ப வசதிகள் இருத்தல் வேண்டும். மற்றப்படி, இந்த யெஸ்டி பைக்கின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம். சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே வழங்கப்படலாம். அதன்படி, 2026 யெஸ்டி ஸ்க்ராம்ப்ளரில் புதிய டிசைனிலான விண்ட்ஸ்க்ரீன் (Windscreen) வழங்கப்படலாம்.
அதேபோல், பைக்கை புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்டுவதற்காக புதிய கலர் ஆப்ஷன்கள் (Colour Options) மற்றும் கிராஃபிக்ஸ் (Graphics) அறிமுகம் செய்யப்படலாம். வழக்கம்போல் 334சிசி என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படும் 2026 யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.20 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறு சிறு குறைகளை தளர்த்தி, 2026 ஸ்க்ராம்ப்ளர் பைக் ஒட்டுமொத்தமாக சிறந்த பேக்கேஜ் ஆக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளுக்கு இந்த பைக் எந்த விதத்திலும் சளைத்தது இல்லை என்பதை நிரூபிக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் முயற்சிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications