2027 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்... ரூ.3.34 லட்சத்தில் 2-சிலிண்டர் ஸ்போர்ட்ஸ் பைக்!

இந்தியாவின் நடுத்தர எடைப் பிரிவு (Middleweight) ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் கவாஸாகி நின்ஜா மிக முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இந்த சந்தையில் பல புதிய போட்டியாளர்கள் களமிறங்கி வரும் நிலையில், கவாஸாகி நிறுவனம் தனது மிகவும் பிரபலமான நின்ஜா 300 பைக்கில் சில மாறுதல்களுடன் 2027 மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.3.34 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் இன்று பெரும்பாலான ரூ.3 முதல் ரூ.4 லட்சம் விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் ஒற்றை சிலிண்டர் (Single-Cylinder) எஞ்சினுடன் விற்பனையாகி வருகின்றன. ஆனால், கவாஸாகி நிறுவனம் தனது புதிய நின்ஜா 300 மாடலை ரூ.3.34 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் மிக முக்கியமான பலம் அதன் இரட்டை சிலிண்டர் (Parallel-Twin) எஞ்சின்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் கிடைக்கும் மிகவும் மலிவு விலை ஃபுல்-ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

Kawasaki Ninja 300

புதுப்பொலிவுடன் நின்ஜா 300

இந்த புதிய 2027 நின்ஜா மாடலில் எஞ்சின் அல்லது மெக்கானிக்கல் அமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய கிராபிக்ஸ், புதுப்பிக்கப்பட்ட வண்ணத் தேர்வுகளுடன் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. நீண்ட காலமாக இந்திய சந்தையில் நிலையான விற்பனையை பதிவு செய்து வரும் நின்ஜா 300 பைக்கிற்கு இது சிறிய அளவிலான அப்டேட்டாகவே பார்க்கப்படுகிறது.

பேரலல் ட்வின் எஞ்சின்

இந்த பைக்கில் 296cc திறன் கொண்ட லிக்விட்-கூல்டு (Liquid-Cooled) வசதியுடன் பேரலல்-ட்வின் (Parallel-Twin) DOHC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 39 பிஎஸ் பவரையும், 26.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் (Assist & Slipper Clutch) வழங்கப்பட்டுள்ளது. இதனால், கியர் மாற்றம் மென்மையாகவும், வேகமான டவுன்ஷிப்டிங்கின்போதும் பின்புற சக்கரம் லாக் ஆகும் வாய்ப்பு தவிர்க்கப்படும்.

Kawasaki Ninja 300 Engine

ஒற்றை சிலிண்டர் எஞ்சின்களுடன் ஒப்பிடும்போது, இரட்டை சிலிண்டர் அமைப்பு அதிக ரிஃபைன்மெண்ட், குறைந்த அதிர்வு மற்றும் நீண்ட தூர பயணங்களில் சிறந்த ஓட்டும் அனுபவத்தை வழங்குகும். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு நின்ஜா 300 பைக் ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. செயல்திறனைப் பொறுத்தவரை கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ்457 மாடல்கள் அதிக பவரை வழங்குகின்றன. ஆனால், அதிக ரிஃபைன்மெண்ட் மற்றும் மென்மையான இரட்டை சிலிண்டர் எஞ்சின் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு நின்ஜா 300 இன்னும் தனித்துவமான தேர்வாக இருக்கிறது.

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் (Telescopic Fork), பின்புறத்தில் மோனோஷாக் (Monoshock) சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (Dual-Channel ABS) ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.மேலும், 17 இன்ச் அலாய் வீல்கள், 785 மில்லிமீட்டர் சீட் உயரம், 17 லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் 179 கிலோ கெர்ப் எடை ஆகியவை இந்த பைக்கின் முக்கிய அம்சங்களாகும்.

Kawasaki Ninja 300 Side profile

பெரிய மாற்றம் இல்லை

இதே விலைப் பிரிவில் கிடைக்கும் பல புதிய போட்டி மாடல்கள் TFT திரை, ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், க்விக்ஷிஃப்டர் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் வருகின்றன. இந்த அம்சங்கள் புதிய நின்ஜா 300 பைக்கில் இல்லை. மாறாக, இரட்டை ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டியான ஃபுல்-ஃபேரிங் வடிவமைப்பு ஆகிய பழக்கப்பட்ட அம்சங்களே தொடர்கின்றன. இது சில வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஏனெனில், தற்போதைய சந்தையில் கிடைக்கும் பல போட்டி மாடல்கள் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வருகின்றன. இருப்பினும், நின்ஜா 300 தனது டிசைன், நம்பகத்தன்மை மற்றும் மென்மையான எஞ்சின் செயல்திறனையே முக்கிய பலமாக வைத்திருக்கிறது.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் யமஹா ஆர்3, ஏப்ரிலியா ஆர்எஸ்457, கேடிஎம் ஆர்சி390, பிஎம்டபிள்யூ ஜி310ஆர்ஆர் ஆகிய மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். இதில் கேடிஎம் ஆர்சி 390 மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ்457 போன்ற பைக்குகள் அதிக பவர், TFT திரை, டிராக்ஷன் கன்ட்ரோல், க்விக்ஷிஃப்டர் போன்ற நவீன அம்சங்களை வழங்குகின்றன.

ஆனால், மென்மையான இரட்டை சிலிண்டர் எஞ்சின் அனுபவம், கவாஸாகி பிராண்டின் நம்பகத்தன்மை மற்றும் நீண்ட தூர டூரிங்கிற்கு ஏற்ற குணாதிசயங்கள் காரணமாக நின்ஜா 300 பைக்கிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால்தான் பல ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் இல்லாமலேயே இந்த மாடல் சந்தையில் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

புதிய 2027 நின்ஜா 300 பைக்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கிராபிக்ஸ் மற்றும் மாடல் இயர் அப்டேட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரூ.3.34 லட்சம் என்ற விலையில் இரட்டை சிலிண்டர் எஞ்சின் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இது இன்னும் கவனிக்க வேண்டிய ஸ்போர்ட்ஸ் பைக்காகவே உள்ளது. பழைய மாடலைவிட ரூ.17,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப வசதிகளை விட விரும்புபவர்களைவிட சிறந்த எஞ்சின், நீண்ட தூர பயணங்களுக்கான அம்சங்கள் மற்றும் கவாஸாகி பிராண்டின் நம்பகத்தன்மை போன்றவற்றை முன்னிலைப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக் இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும்.

Article Published On: Tuesday, July 28, 2026, 12:08 [IST]
English summary
2027 kawasaki ninja 300 launched india price engine features
மேலும்... #kawasaki #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X