விலை ரூ.20.99 லட்சம்... வந்துவிட்டது 2027 டிரையம்ப் டைகர் 1200... என்னென்ன புதுசு?

இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதற்கு தக்கவாறு பல்வேறு பட்ஜெட்டுகளில் ஏராளமான மாடல்கள் இருந்தாலும் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் பிரிமீயம் வரிசை பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள், மலைப்பாதைகள், கரடுமுரடான சாலைகள் என அனைத்திலும் கம்பீரமாக பயணிக்க விரும்புபவர்களின் தேர்வில் டிரையம்ப் டைகர் (Triumph Tiger) வரிசைக்கு முக்கிய இடம் உண்டு. இந்நிலையில், இந்த பைக்கிற்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி 2027 மாடலாக டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய 2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்கின் GT Pro வேரியண்ட் ரூ.20.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும், Rally Explorer வேரியண்ட் ரூ.23.49 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்ட்டுகளும் வரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Triumph Tiger 1200

2027 டிரையம்ப் டைகர் 1200 பைக்கில் 1,160 சிசி லிக்யூடு கூல்டு இன்லைன் 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 158 எச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 8 எச்பி கூடுதல் பவர் கிடைக்கிறது.

எஞ்சின் சிலிண்டர் ஹெட், பிஸ்டன்கள் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. குறைந்த வேகத்தில் அதிக டார்க் கிடைப்பதுடன், கியர் விகிதங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கரடுமுரடான பாதைகளில் மெதுவாகவும் கட்டுப்பாட்டுடனும் பைக்கை இயக்குவது எளிதாக இருக்கும்.

Triumph Tiger 1200

சேஸிஸ், சஸ்பென்ஷன்

இந்த புதிய பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் வழங்கப்பட்டுள்ளன. GT Pro வேரியண்ட்டில் அலுமினியம் அலாய் வீல்களும், Rally Explorer வேரியண்ட்டில் ஸ்போக் வீல்களும் இடம்பெற்றுள்ளன. முந்தைய மாடல்களில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும் வழங்கப்பட்ட நிலையில், இந்த மாடலில் அது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்புறத்தில் 49 மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகளும் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டுமே 200 மிமீ டிராவல் நீளம் கொண்டதாக உள்ளன. இதில் செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் இருப்பதால், சாலையின் தன்மைக்கு ஏற்ப தானாகவே சஸ்பென்ஷன் அமைப்பை மாற்றிக்கொள்ளும்.

Also Read

ரேடார் பாதுகாப்பு வசதிகள்

இந்த பைக்கில் முன்புறம் மற்றும் பின்புறம் வழங்கப்பட்டுள்ள போஷ் ரேடார் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக குறிப்பிடலாம். இதன் மூலம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட் மற்றும் ரியர் டிஸ்டன்ஸ் வார்னிங் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன.

மேலும், புதிய 7 அங்குல TFT தொடுதிரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. GT Pro வேரியண்ட்டில் 7 ரைடிங் மோடுகளும், Rally Explorer வேரியண்ட்டில் 8 ரைடிங் மோடுகளும் இடம்பெற்றுள்ளன.

Also Read

என்ன வித்தியாசம்?

GT Pro வேரியண்ட்டில் 20 லிட்டர் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. Rally Explorer வேரியண்ட்டில் 30 லிட்டர் டேங்க் இருப்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், இதில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எஞ்சினுக்கு பாதுகாப்பு கவச அமைப்புகள் மற்றும் உயரமான ஹேண்டில்பார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

GT Pro வேரியண்ட்டின் எடை 250 கிலோவாகவும், Rally Explorer வேரியண்ட்டின் எடை 268 கிலோவாகவும் உள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளிலும் முன்பக்கத்தில் இரட்டை 320 மிமீ டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புறத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ R 1300 GS மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 ஆகிய பைக்குகளுடன் இந்த 2027 மாடலாக வந்துள்ள டிரையம்ப் டைகர் 1200 மாடல்கள் போட்டி போடும். பிஎம்டபிள்யூ R 1300 GS பைக்கின் விலை ரூ.24 லட்சம் முதல் தொடங்குகிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 பைக்கின் ஆரம்ப விலை ரூ.25.06 லட்சமாக உள்ளது.

Article Published On: Saturday, October 31, 2026, 11:08 [IST]
English summary
2027 triumph tiger 1200 launched india price features
மேலும்... #triumph motorcycles #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out