கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ரைடர் 125 பைக் அறிமுகம்: முழு விபரம்!

இந்தியாவின் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது புகழ்பெற்ற ரைடர் 125 மோட்டார் சைக்கிளில் குறிப்பிடத்தக்க கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாடலாக களம் இறக்கியுள்ளது. செயல்திறன் மற்றும் ஸ்டைலில் ஏற்கனவே கலக்கி வரும் இந்த பைக்கில், தற்போது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் பல அதிநவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அன்றாட நகர்ப்புறப் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் மாற்றும் நோக்கில் இந்த அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலின் மிக முக்கியமான சிறப்பம்சமாக டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS) சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக உயர் ரக பைக்குகளில் மட்டுமே வழங்கப்படும் இந்த தொழில்நுட்பம், இப்போது 125சிசி ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் பிரிவிலும் கொடுக்கப்படுவது கவனிக்கத்தக்க விஷயமாக கூறலாம்.

TVS Raider

ஈரமான சாலைகள் அல்லது மணல்பாங்கான சாலைகளில் திடீரென பிரேக் பிடிக்கும்போதோ அல்லது ஆக்ஸிலரேட்டரை கொடுக்கும்போதோ சக்கரங்கள் வழுக்காமல், வாகனத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க உதவுகிறது. தினசரி அலுவலகம் செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த பாதுகாப்பு அம்சம் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும்.

செயல்திறனைத் தாண்டி நடைமுறை பயன்பாட்டு வசதிகளிலும் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் பின்புறத்தில் சற்று அகலமான டயர் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இது நெரிசலான நகரச் சாலைகளில் வளைவுகளில் திரும்பும்போதும், நீண்ட தூரப் பயணங்களின்போதும் பைக்கின் ஸ்திரத்தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

Also Read

அத்துடன் பயணத்தின் நடுவே ஸ்மார்ட்போன்களை எளிதாக சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக நவீன யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுக தலைமுறைக்கு இது மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும். இதன் SXC DD வேரியண்ட்டிற்கு ரூ.1,00,330 எக்ஸ்ஷோரூம் விலையும், TFT DDD
வேரியண்ட்டிற்கு ரூ.1,03,330 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் மற்றும் பிற செயல்திறன் விபரங்களைப் பொறுத்தவரை, முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே நம்பகமான எஞ்சின் தொடர்கிறது. இது நகர்ப்புற நெரிசலில் சிறப்பான பிக்கப்பையும், நெடுஞ்சாலைகளில் நிலையான வேகத்தையும் வழங்குகிறது. தினசரி பயன்பாட்டிற்குத் தேவையான சிறந்த மைலேஜை வழங்குவதில் இந்த எஞ்சின் பெயர் பெற்றது என்பதால், எரிபொருள் செலவு குறைவாக எதிர்பார்ப்பவர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்.

Also Read

இந்திய சந்தையில் ஸ்போர்ட்ஸ் 125சிசி பிரிவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வரும் ரெய்டர் பைக் வரிசையில், இந்த புதிய அம்சங்கள் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் வந்துள்ள இந்த 2027 டிவிஎஸ் ரைடர் 125, ஸ்டைல் மற்றும் எளிதான நடைமுறை பயன்பாட்டை எதிர்பார்ப்பவர்களுக்குச் சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Article Published On: Thursday, October 15, 2026, 18:18 [IST]
English summary
2027 tvs raider 125 traction control usb type c launched price features
மேலும்... #tvs motor #new launches #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out