ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-க்கு மொத்தமாக 'எண்ட் கார்டு' போட்ட 3 பைக்குகள்! எதை வாங்குவது?

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கை நம்மில் நிறைய பேர் பயன்படுத்தி வருகிறோம். பல வருடங்களாக புல்லட் பைக்கை பயன்படுத்தி வருபவர்களும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு வரையில் புல்லட் 500 பைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதன் விற்பனை நிறுத்தப்பட்டாலும், சமீபத்தில் புதிய புல்லட் 650 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஏதோ ஒரு விதத்தில் புல்லட் பைக்கை பயன்படுத்துபவர்கள் நம்மில் ஏராளமான பேர் இருக்கின்றனர். அவ்வாறான புல்லட் பைக்கை பயன்படுத்தி முடித்து, அதற்கு பதிலாக வேறொரு பைக்கை வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்காக மூன்று பைக் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

royal enfield bullet replacements

புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 (Royal Enfield Bullet 650): தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து புல்லட் பைக்கை அதிகமாக பயன்படுத்தி, கிட்டத்தட்ட அதே பண்புகளை கொண்ட புதிய பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புல்லட் 650 ஏற்றதாக இருக்கும். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட வழக்கமான புல்லட் பைக்குகளின் தோற்றத்தில் புல்லட் 650 உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது இதுவரையில் உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் பவர்ஃபுல்லான புல்லட் பைக் ஆகும். இதில் வழங்கப்பட்டுள்ள 648சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 47.04 பிஎஸ் மற்றும் 52.3 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. மொத்தம் 243 கிலோ எடை கொண்ட புதிய புல்லட் 650-இல் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

royal enfield bullet replacements

பி.எஸ்.ஏ கோல்டுஸ்டார் 650 (BSA Goldstar 650): பழமையான ரெட்ரோ தோற்றத்தில் பைக்கை ராயல் என்ஃபீல்டு பிராண்டில் இல்லாமல், வேறொரு பிராண்டில் எதிர்பார்க்கிறீர்கள் எனில் இந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் ஏற்றதாக இருக்கும். ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக பிஎஸ்ஏ நிறுவனத்தில் இருந்து இந்த 650சிசி பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பைக்கில் பொருத்தப்படும் 652சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 45.62 பிஎஸ் மற்றும் 55 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. பைக்கில் குறைந்த மற்றும் மிதவான வேகத்தில் செல்லும்போதும் இந்த என்ஜின் சிறந்த செயல்படுதிறனை வழங்குகிறது. இருப்பினும், இதில் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் மட்டுமே வழங்கப்படுவதை மறந்துவிட வேண்டாம்.

royal enfield bullet replacements

கவாஸாகி எலிமினேட்டர் (Kawasaki Eliminitor): புல்லட் பைக்குகளை ஓட்டியதற்கும், இதனை ஓட்டுவதற்கும் சிறிய வித்தியாசம் மட்டுமே இருக்கும். அந்த சிறிய வித்தியாசம் இருப்பதற்கு காரணம், இது தாழ்வான உடலமைப்பை கொண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். தோற்றத்தை பொறுத்தவரையில், புல்லட் பைக்குகளை போன்று ரெட்ரோ தோற்றத்தில் இல்லாமல், மாடர்னான க்ரூஸர் பைக்காக இது உருவாக்கப்படுகிறது.

இந்த பைக்கில் பொருத்தப்படும் 451சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 45 பிஎஸ் மற்றும் 42.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த பைக்கில் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கவாஸாகி பைக்கின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால், அது இதன் வெறும் 176 கிலோ எடை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு மாற்றாக வேறொரு பைக்கை தேர்வு செய்வது என்பது சவாலானதே. இதனால் முடிந்தவரையில் அதே ராயல் என்ஃபீல்டு பிராண்டில் வேறொரு பைக்கை வாங்குவது சிறந்த முடிவாகும். இல்லையென்றால், இந்த தொகுப்பில் நாம் பார்த்ததுபோல் பிஎஸ்ஏ, கவாஸாகி என மற்ற பிராண்ட்களின் பக்கம் செல்லலாம்.

Article Published On: Saturday, May 30, 2026, 11:05 [IST]
English summary
3 perfect bikes to replace your royal enfield bullet check all models here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X