ரிவோல்டின் புதிய RVX எலெக்ட்ரிக் பைக்.. 160 கிமீ ரேஞ்சு.. கம்மி விலை!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போல இல்லாமல் இந்தியாவில் சில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. அதில் முக்கியமான ஒரு நிறுவனமாக ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) உள்ளது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்னதாக RVX என்ற புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிட்டது. இந்த பைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

ரிவோல்ட் RVX விலை என்ன?

புதிய RVX எலெக்ட்ரிக் பைக்கை 1.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது ரிவோல்ட் மோட்டார்ஸ். இதனை அறிமுக விலை என்று தான் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. எனவே சில மாதங்களில் இதன் விலை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. எவ்வளவு என்பது குறித்த விவரங்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

Revolt RVX

எவ்வளவு ரேஞ்சு கொடுக்கும்?

எரிபொருள் பைக்குகளைப் பார்த்தவுடன் நாம் கேட்கும் முதல் கேள்வி மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் என்பதாகத் தான் இருக்கும். அதேபோல் தான் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ரேஞ்சு. புதிய RVX பைக்கில் 3.24 kWh பேட்டரி பேக்கை கொடுத்துள்ளது ரிவோல்ட் மோட்டார்ஸ். ரிமூவபிள் பேட்டரி பேக் வகையான இது 160 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சார்ஜிங் நேரம் எவ்வளவு?

இந்த பைக்கிற்கு நிறுவனம் கொடுக்கும் ஸ்டாண்டர்டான 10A சார்ஜரைப் பயன்படுத்தி, RVX-ன் பேட்டரி பேக்கை 0-80 சதவீதம் வரை 3.30 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். 100 சதவீதம் சார்ஜ் ஆக இந்த பேட்டரி 4.45 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27A ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக இந்த பேட்டரி பேக்கை 0-80 சதவீதம் வரை 1.20 மணி நேரத்திலேயே சார்ஜ் செய்ய முடியும்.

Revolt RVX

பவர்ட்ரெயின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்:

இந்த பைக்கில் 5.3 kW பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொடுத்துள்ளது ரிவோல்ட் மோட்டார்ஸ். டார்க் 230 Nm ஆக உள்ளது. பவரைக் கடத்துவதற்கு இந்த பைக்கில் செயின் டிரைவை ரிவோல்ட் பயன்படுத்தியிருக்கிறது. இந்த பவர்ட்ரெயினுடன் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறனை RVX பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

ஆனால், இந்த அதிகபட்ச வேகம் என்பது பூஸ்ட் மோடில் தான். ஸ்போர்ட் மோடில் அதிகபட்ச வேகம் 80 கிமீ தான். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பூஸ்ட் மோடை பயன்படுத்த பைக்கும் அனுமதிக்க வேண்டும். எலெக்ட்ரிக் மோட்டார் பூஸ்ட் மோடைப் பயன்படுத்தும் வகையில் இல்லையென்றால் பைக் தன்னிச்சையாகவே ஸ்போர்ட் மோடுக்கு மாறிவிடும்.

ஹேண்டில் செய்வதற்கு எளிதாக இருக்குமா?

இந்த பைக்கானது 815 மிமீ வரையிலான சீட் உயரத்தையும், 120 கிலோ வரையிலான எடையையும் கொண்டுள்ளது. இரண்டு பக்கமும் 17 இன்ச் வீல்களுடன், டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 190 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் இருப்பதனால் சாலையின மேடு பள்ளங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சீட் உயரம் கொஞ்சம் அதிகம் தான். உயரம் குறைவானவர்கள் கொஞ்சம் சிரமப்படலாம். எடை எளிதாக ஹேண்டில் செய்யக்கூடியது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் பைக்கை வாங்க வேண்டும் என விரும்பினால் இந்த ரிவோல்ட் RVX பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் பைக்குகளிலேயே ரிவோல்ட் மோட்டார்ஸின் பைக்குகள் கொஞ்சம் நம்பகமானவையாகவே இருக்கின்றன. இந்த RVX மட்டுமின்றி இன்னும் நிறைய எலெக்ட்ரிக் பைக் மாடல்களையும் ரிவோல்ட் தங்களுடைய லைன்-அப்பில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Friday, July 3, 2026, 14:01 [IST]
English summary
5 things to know about revolt rvx electric bike before buying
மேலும்... #revolt #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out