எலெக்ட்ரிக் 2-வீலர்களில் AI என்ன செய்யுது? 1 லட்ச ரூபாயில் கூட இ-பைக் கிடைக்குது!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் (Electric) இருசக்கர வாகனங்கள் தற்போது வழக்கமான பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களை விட தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக மாறி வருகின்றன. பெரும்பாலான எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்த ஏஐ (AI) அடிப்படையிலான அமைப்புகளையும், கனெக்டட் தொழில்நுட்பங்களையும் கொண்ட மென்பொருள் சார்ந்த வாகனங்களாக திகழ்கின்றன.

வாகனத் துறையில் AI தொழில்நுட்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல மோட்டார்சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மேம்பட்ட டிரைவிங் அனுபவத்திற்காகவும், வாகனங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திறனை அதிகரிப்பதற்காகவும் இதை ஏற்றுக்கொள்கின்றன. AI மூலம் இயங்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்தியாவின் முக்கிய ஐந்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இவை.

ai-driven electric two-wheelers

5. ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400): இந்தியாவில் வெளிவந்த ஆரம்பக்கால எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் ரிவோல்ட் ஆர்வி400 ஒன்றாகும். இந்த இ-பைக்கில் ஸ்மார்ட் சவுண்ட் சிஸ்டம், கூகுள் அசிஸ்டன்ட் ஒருங்கிணைப்பு, ஸ்மார்ட்டான ரேஞ்ச் கணக்கீடு மற்றும் வாகனத்தின் பழுதை கண்டறிதல் (vehicle diagnostics) ஆகியவை 'மைரிவோல்ட்' (myRevolt) செயலி மூலம் கிடைக்கின்றன.

ai-driven electric two-wheelers

4. மேட்டர் ஏரா (Matter Aera): இந்தியாவில் 4-ஸ்பீடு ஹைப்பர்ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் வரும் ஒரே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மேட்டர் ஏரா ஆகும். இது பெட்ரோல் பைக்குகளைப் போலவே இருக்கிறது. இதில், ஏஐ மூலமாக பைக்கின் அனைத்து பகுதிகளிலும் வெப்பநிலையை பராமரிப்பது (Integrated Intelligent Thermal Management System) மட்டுமின்றி, ஸ்மார்ட் லிக்யுடு கூலிங் மூலம் பேட்டரி வெப்பநிலையை சிறப்பாக நிர்வகிக்கிறது.

ai-driven electric two-wheelers

3. டிவிஎஸ் எக்ஸ் (TVS X): இது ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வகை வாகனமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவின் மிகவும் அட்வான்ஸான இருசக்கர வாகனங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் 10.2 இன்ச் எக்ஸ்டில்ட் (Xtilt) TFT பனோரமிக் டிஸ்ப்ளே உள்ளது. இது ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு மற்றும் AI-உதவி கனெக்டட் அம்சங்களுடன் வருகிறது. நவ்புரோ (NavPro) நாவிகேஷன், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸீல்டு (Smart Xhield) ஆகியவை இதன் முக்கிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் ஆகும்.

ai-driven electric two-wheelers

2. ஓலா ரோட்ஸ்டர் (Ola Roadster): இது AI மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த அம்சமானது பல ரோட்ஸ்டர் பைக்குகளை ஒரு குழுவாக குரல் மூலம் கட்டுப்படுத்த உதவுகிறது. ஸ்மார்ட் பார்க்கிங், க்ரூஸ் கண்ட்ரோல், நாமாக செட் செய்யக்கூடிய ரைடிங் மோட்கள் மற்றும் மேம்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற பிற AI-உதவி அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் உள்ளன.

ai-driven electric two-wheelers

1. அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Ultraviolette Electric Vehicles): இந்த பிரிவில் மிகவும் மேம்பட்ட AI அடிப்படையிலான ஓட்டுநர் உதவி அமைப்புகளை வழங்கும் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் 'வயலட் ஏஐ' (Violette AI) ஒரு டிஜிட்டல் இணை-பைலட்டாக செயல்பட்டு பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பயன்பாட்டு அம்சங்களை நிகழ்நேரத்தில் நிர்வகிக்கிறது. வாகனம் கீழே விழுந்தாலோ அல்லது இழுத்துச் செல்லப்பட்டாலோ இந்த அமைப்பு உடனே கண்டறிந்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை அனுப்பும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைய சூழலில் ஏஐ நுழையாத துறையே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஆட்டோமொபைல் (Automobile) துறையிலும் ஏஐ-இன் பயன்பாடு வாகனங்களில் அதிகரித்து வருகிறது. எங்களை கேட்டால், கார்களை விட ஏஐ-இன் பயன்பாடு இருசக்கர வாகனங்களுக்கே அதிகம் தேவை. ஏனெனில், அதிகம் விபத்தில் சிக்குவதும், திருடப்படுவதுமாக இருசக்கர வாகனங்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 31, 2026, 5:00 [IST]
English summary
Ai driven electric two wheelers in india 2026 ultraviolette evs and ola roadster e bike
மேலும்... #electric vehicles #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X