ரூ.1.70 லட்சத்தில் ஹோண்டாவின் புதிய ADV 160 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் முழு விபரம்!

இந்தியாவில் வழக்கமான ஸ்கூட்டர்களை தாண்டி, தோற்றத்தில் முரட்டுத்தனமாகவும், சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இருக்கும் மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய ADV 160 ஸ்கூட்டரை இந்தியாவில் ரூ.1.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, அதிக அளவு எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் எஞ்சினுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் வந்துள்ளது.

புதிய ஹோண்டா ADV 160 ஸ்கூட்டரில் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் என்ற எரிபொருள் வகை தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டாவின் FlexTech தொழில்நுட்பம் மூலம் E85 வரையிலான எரிபொருள் கலவையை பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமான பெட்ரோலில் இருக்கும் எத்தனால் அளவை விட 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த எரிபொருளிலும் இதன் எஞ்சின் இயங்கும். இந்த E85 இணக்கமான எஞ்சினுடன் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்துடன் இந்திய ஸ்கூட்டர் சந்தையில் வரும் முக்கியமான மாடலாக ADV 160 மாறியுள்ளது.

Honda ADV 160 Scooter

இந்த ஸ்கூட்டரில் 156.9cc திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச மாடலில் இந்த எஞ்சின் 16.3 பிஎஸ் பவரையும் 14.9 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்திய மாடலுக்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியிடப்படவில்லை.

Also Read

வடிவமைப்பைப் பொறுத்தவரை, வழக்கமான ஸ்கூட்டர்களிலிருந்து ADV 160 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை நினைவுபடுத்தும் வகையில் உயரமான முன்பகுதி, பெரிய பாடி பேனல்கள், அகலமான வடிவம் மற்றும் எஸ்யூவி கார்கள் போன்று ஆளுமையான தோற்றம் ஆகியவை முக்கிய அம்சங்களாக சொல்லலாம். இதன் காரணமாக, தினசரி அலுவலகப் பயணத்துக்கும் வார இறுதி பயணங்களுக்கும் ஒரே ஸ்கூட்டரை பயன்படுத்த விரும்புபவர்களை இது சிறந்த தேர்வாக இருக்கும்.

வசதிகளிலும் ஹோண்டா குறை வைக்கவில்லை. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஹோண்டாவின் RoadSync ஸ்மார்ட்போன் இணைப்பு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி மற்றும் டார்க் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பொருட்கள் வைப்பதற்கான 27 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் ஸ்டோரேஜ் வழங்கப்படுவது தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் 8.1 லிட்டர் பெட்ரோல் டேங்கும் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

Also Read

முன்புறத்தில் 14 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 13 அங்குல சக்கரமும் உள்ளன. பாதுகாப்புக்காக முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இதனுடன் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்படுவதால், குறிப்பாக ஈரமான சாலைகளில் ஸ்கூட்டரை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் உதவி கிடைக்கும்.

ஹோண்டா ADV 160 ஸ்கூட்டருக்கான முன்பதிவு ரூ.5,000 முன்பணத்துடன் தொடங்கியுள்ளது. ஹோண்டாவின் ரெட்விங் மற்றும் பிக்விங் டீலர்ஷிப்புகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். டெலிவரி பணிகள் அக்டோபர் மத்தியில் தொடங்க உள்ளன. யமஹா ஏராக்ஸ் 155 மற்றும் ஹீரோ ஸூம் 160 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Article Published On: Tuesday, August 25, 2026, 17:00 [IST]
English summary
All new honda adv 160 india launched price e85 flex fuel features
மேலும்... #new launches #honda motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out