ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக் வேண்டாமா.. அதே விலையில வேற எந்த பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்கலாம்?

தற்போது இந்தியாவில் ஹாட்டான பைக் பிரிவு என்றால் அது 125 சிசி பிரிவு தான். பைக்குகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், 150 சிசி பிரிவைத் தொடர்ந்து 125 சிசி பிரிவில் மேம்பட்ட வசதிகளுடன் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு பைக்குகளை பைக் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் முக்கியமான ஒரு பைக் மாடல் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R.

ஸ்போர்ட்டியான, ஸ்டைலான டிசைன் மற்றும் 125 சிசி பிரிவில் அதுவரை கொடுக்கப்படாத பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் வெளியானது எக்ஸ்ட்ரீம் 125R. ஸ்போர்ட்டியான 125 சிசி பைக் வேண்டும் என்றால், வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த பைக்கே இருந்து வருகிறது. ரூ.89,300 முதல் ரூ.1.05 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பைக்கிற்கு மாற்றாக வேறு எந்த பைக் அல்லது ஸ்கூட்டரை இந்தியாவல் தற்போது நாம் வாங்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

Bajaj Pulsar NS125

பஜாஜ் பல்சர் NS125: 125 சிசி பிரிவில் ஸ்போர்ட்டியான ஒரு பைக்காக பல ஆண்டுகளாகவே விற்பனையில் இருக்கும் ஒரு மாடல் இந்த பல்சர் NS125. எக்ஸ்ட்ரீம் 125R-ன் ஸ்ட்ரீட்ஃபைட்டர் டிசைன் தான் உங்களைக் கவர்ந்த முதல் அம்சம் என்றால், அதற்கு நல்ல மாற்று இந்த NS125 தான்.

சமீபத்தில் தான் LED முகப்பு விளக்குகள், மூன்று ABS மோடுகள் மற்றும் ப்ளூடுத் கனெக்டிவிட்டியுடன் கூடிய LCD கன்சோல் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த பைக்கை பஜாஜ் அப்டேட் செய்தது. ஸ்போர்ட்டியான டிசைன், நல்ல மைலேஜ், சிறப்பான பெர்ஃபாமன்ஸ் என அனைத்து கலந்த பேக்கேஜாக இந்த பைக் இருக்கிறது. ரூ.92,760 முதல் ரூ.99,073 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை நாம் வாங்கலாம்.

TVS Raider 125

டிவிஎஸ் ரெய்டர் 125: டிவிஎஸ்ஸின் ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக் இந்த ரெய்டர் 125. இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான நடுநிலையான டிசைனை இந்த ரெய்டர் 125 பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. iGo அசிஸ்ட், கிளைடு த்ரூ டிராஃபிக் மற்றும் டாப் எண்டில் TFT டிஸ்பிளே உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளையும் இந்த பைக் கொண்டுள்ளது. ரூ.82,000 முதல் ரூ.97,050 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை நாம் வாங்கலாம்.

ஹீரோ ஸூம் 125 (ஸ்கூட்டர்): பைக் தான் என்றில்லாமல் ஸ்கூட்டர்களும் ஓகே தான் என்றால், எக்ஸ்ட்ரீம் 125R-க்கு மாற்றாக இந்த ஸூம் 125 ஸ்கூட்டர் மாடலை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். எக்ஸ்ட்ரீமின் அதே ஸ்போர்ட்டியான தன்மையை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஸூம் 125 ஸ்கூட்டரின் பெர்ஃபாமன்ஸ் இருக்கும். மேலும், இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்களைக் கொண்டிருப்பதால், ஓட்டும் போது பைக்கிற்கு இணையான நிலைத்தன்மையை இந்த ஸ்கூட்டரும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன் ஸ்கூட்டருக்கே உரிய பிராக்டிகாலிட்டி அம்சங்களையும் இந்த ஸூம் 125 உடன் நாம் பெறமுடியும். இந்த ஸ்கூட்டரில் சீக்வென்ஷியல் இன்டிகேட்டர்கள், USB சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய முன்பக்க ஸ்டோரேஜ், டிஜிட்டல் டேஷ்போர்டு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் பிற கனெக்டிவிட்டி அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. ரூ.81,194 முதல் ரூ.86,025 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விடா VX2 (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்): எக்ஸ்ட்ரீம் 125R பைக்கிற்கு மாற்றாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம். பைக்கைப் போல நீண்ட தூரம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்ய முடியாது என்றாலும், அதற்கு மாற்றாக வேறு சில நன்மைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். குறிப்பாக மிகவும் குறைவான பயன்பாட்டு செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கூறலாம்.

எக்ஸ்ட்ரீம் 125R பைக்கை நகரத்திற்குள் மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், அதற்கு மாற்றாக கண்டிப்பாக இந்த VX2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் பரிசீலிக்கலாம். 142 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. பல்வேறு மேம்பட்ட வசதிகள் கொண்ட இந்த ஸ்கூட்டரை ரூ.73,850 முதல் ரூ.94,800 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.

ஓபன் ரோர் EZ சிக்மா (எலெக்ட்ரிக் பைக்): ஸ்கூட்டர் எல்லாம் செட்டாகாது பாஸ் என்பவரா நீங்கள், அப்போ இந்த எலெக்ட்ரிக் பைக்கை கூட ஒருமுறை பாருங்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் போலவே குறைவான பயன்பாட்டு செலவு மற்றும் பாரமரிப்புச் செலவு ஆகிய பிளஸ் பாயிண்டுகள் இந்த எலெக்ட்ரிக் பைக்கிலும் உண்டு. ஆனால் பிராக்டிகாலிட்டி அம்சங்கள் குறைவாகவே இருக்கும்.

140 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் மாடலானது, அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் பிரேக்குகள், ரிவர்ஸ் மோடு, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே ஆகிய வசதிகள் இந்த பைக்கில் உள்ளன. ரூ.1 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை நாம் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்ட்ரீம் 125R பைக்கை விரும்பி வாங்குவதற்கான தனிப்பட்ட காரணங்கள எதுவும் இல்லையென்றால், மேலே கூறி மற்ற இருசக்கர வாகனங்களையும் நீங்கள் பரிசீலனை செய்யலாம். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களை. அனைத்து வாகனங்களுக்கும் அதற்கான பிளஸ் மற்றும் மைனஸ்கள் இருக்கின்றன. உங்களது பயன்பாட்டு அடிப்படையில் எது சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதைப் பார்த்து வாங்கலாம்.

நீண்ட தூரம் பைக் பயன்பாடு இருக்கும் என்பவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த தேர்வாக இருக்காது. ஆனால், குறைவான தூரம் மட்டுமே தினசரி பயன்பாடு இருக்கும் என்றால் எலெக்ட்ரிக் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். எனவே உங்களது பயன்பாடு எது என்பதை முடிவு செய்து விட்டு, அதற்கேற்ப மேற்குறிப்பிட்டிருக்கும் மாடல்களில் ஒன்றையோ அல்லது அது சார்ந்த வேறொரு மாடலையோ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 13:57 [IST]
English summary
Alternatives for hero xtreme 125r bike all details check here
மேலும்... #hero motocorp #125 சிசி #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+