கம்மி விலையில தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடுவோம்.. அதிரடியாக அறிவித்த இந்திய நிறுவனம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக டிமாண்டு அதிகரித்து வருகிறது. அதுவும் சற்று விலை குறைவான, குறிப்பாக ரூ.1 லட்சத்திற்குள்ளான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கூட்டர்களை அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், ரூ.1 லட்சத்திற்குள்ளான ஸ்கூட்டர் பிரிவிலேயே தொடர்ந்து விரிவாக்கம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளது கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம்.

இந்தியாவில் குறைவான விலையில் நிறைவான அம்சங்களைக் கொண்ட ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் ஓலாவை விட அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனைப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Ampere Reo 80

ஏற்கனவே குறைவான விலையில் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அந்நிறுவனம் விற்பனையில் வைத்திருக்கும் நிலையில், நடப்பு நிதியாண்டிலும் ரூ.1 லட்சத்திற்குள்ளான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைப் பங்கு 4.4% ஆக உள்ளது. இதனை விரைவில் 10%-தத்திற்கும் மேலாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது அந்நிறுவனம்.

தற்போது இந்தியாவில் 27 மாநிலங்களில் 500-க்கும் மேலான கிரீவ்ஸ் மொபிலிட்டி டீலர்ஷிப்கள் செயல்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மேலும் விரிவாக்கம் செய்யவும், அதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை உயர்த்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் இந்தியாவில் தற்போது விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் குறித்துப் பார்க்கலாம்.

Ampere Magnus

இந்தியாவில் தற்போது, நெக்சல், மேக்னஸ் கிராண்டு, ரியோ 80, மேக்னஸ் ஜி மேக்ஸ் மற்றும் மேக்னஸ் நியோ ஆகிய ஐந்து ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இதில் நெக்சஸ் தான் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. இதனை ரூ.1.20 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது கிரீவ்ஸ் மொபிலிட்டி.

இந்த நெக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பேக் மற்றும் 4 kW பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் அடங்கிய பவர்ட்ரெயின் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. 100 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அதிகபட்சமாக மணிக்கு 93 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரியை 3.3 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

அடுத்ததாக மேக்னஸ் ஜி மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ.94,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், மேக்னஸ் கிராண்டு மற்றும் மேக்னஸ் நியோ ஆகிய மாடல்களை முறையே ரூ.89,999 மற்றும் ரூ.86,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளிலும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி. இதன் லைன்-அப்பில் மிகவும் குறைவான விலையைக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் அது ரியோ 80 தான். இதனை ரூ.59,900 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது.

குறைவான வேகத்தில் செல்லக்கூடிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. வாங்கிச் சென்று அப்படியே பயன்படுத்தத் தொடங்கிவிடலாம். 1.44 kWh LFP பேட்டரி பேக்குடன் 80 கிமீ வகையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கிறது இந்த ரியோ 80 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

இந்த ஸ்கூட்டரில் 0.25 kW (0.33 hp) பவர் மற்றும் 35 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பவர்ட்ரெயினின் உதவியுடன் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ என்ற குறைவான வேகத்திலேயே நாம் பயணம் செய்ய முடியும். எனவே தான் இதற்கு பதிவுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில் பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதில் ரூ.1 லட்சத்திற்குள்ளான விலையில் பல மாடல்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக கிரீவ்ஸ் மொபிலிட்டி இருக்கிறது. வரும் ஆண்டுகளில் முன்னணி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக இது இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 14, 2026, 14:07 [IST]
English summary
Ampere continue to focus on sub 1 lakh electric scooter segment in india
மேலும்... #ampere electric #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+