3 லட்சம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! TVS, பஜாஜ்க்கு போட்டியா விலையும் கம்மி

க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் டாப்-10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட்களுள் ஒன்றாக ஆம்பியர் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

க்ரீவ்ஸ் காட்டன் என்கிற பருத்தி விற்பனை நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் விளையும் பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் க்ரீவ்ஸ் பிரபலமான நிறுவனம் ஆகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பருத்தி வணிகத்தில் ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் அதன் மூலமாக பல்வேறு வணிகங்களில் ஈடுப்பட ஆரம்பித்தது.

ampere electric scooters sales milestone

அதன்படி, எலெக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட்டிற்காக க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்கிற நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் இருந்து பல்வேறு விதமான இவி பிராண்ட்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஆம்பியர் ஆகும். ஆம்பியரில் இருந்து தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் 3 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்துள்ளது.

இதன் மூலமாக இந்தியாவின் டாப்-10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட்களுள் ஒன்றாக ஆம்பியர் இடம்பிடித்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கையின் மூலம் ஒட்டுமொத்தத்தில் 3 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை என்கிற மைல்கல்லை ஆம்பியர் கடந்துள்ளது. 2.70 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆம்பியர் எட்டியிருந்தது.

ampere electric scooters sales milestone

அதனை தொடர்ந்து தற்போது 3 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை ஆம்பியர் எட்டியிருப்பதை வைத்து பார்த்தால், கடந்த மூன்று மாதங்களில் 30 ஆயிரம் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இந்தியாவில் முதன்முதலாக தோன்றிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுள் ஒன்றான ஆம்பியர் கடந்த பல வருடங்களில் தன்னை ஒரு முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக முன்னிறுத்தி உள்ளது.

இதன் மூலமாக, டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் எனர்ஜி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலானதாக ஆம்பியர் விளங்குகிறது. இத்தனைக்கும் ஆம்பியர் பிராண்டில் இருந்து தற்போதைக்கு மூன்றே மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை மூன்றும் மக்களின் பேரதரவை பெற்று வருகின்றன.

அவையாவன, ஆம்பியர் நெக்ஸஸ், ஆம்பியர் மேக்னஸ் மற்றும் ஆம்பியர் ரெயோ என்பன ஆகும். நடைமுறைத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் செயல்படுதிறனுக்கு பெயர் பெற்ற இந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூன்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றவைகளாக விளங்குகின்றன. அதேபோல், இவற்றின் விலைகளும் குறைவாக உள்ளன.

குறிப்பாக, ஆம்பியர் மேக்னஸ் மற்றும் ரெயோ ஆனது ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் இந்தியாவின் மலிவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக விளங்குகின்றன. இவ்வாறு அசத்தலான தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கும் ஆம்பியர் நிறுவனத்திற்கு வலுவானதாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆம்பியர் நிறுவனத்திற்கு 500க்கும் அதிகமான டீலர்ஷிப் ஷோரூம்கள் தற்சமயம் நாடு முழுவதும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மே மாதத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஆம்பியர் நிறுவனம் 6வது இடத்தை பிடித்துள்ளது. சில மாதங்களில் விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை கூட முந்தும் ஆம்பியர் நிறுவனம் இந்தியாவில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். இதனாலேயே புதியது, புதியதாக எத்தனை இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மார்க்கெட்டில் நுழைந்தாலும் டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு சவால்விடக் கூடியதாக ஆம்பியர் விளங்குகிறது.

Article Published On: Friday, June 19, 2026, 15:18 [IST]
English summary
Ampere electric scooters sales crossed 3 lakh milestone in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out