4.5 மணிநேரம் சார்ஜ் போட்டா 100கிமீ-க்கு ஓட்டலாம்! ஸ்கூட்டர் விலை 1 லட்ச ரூபா கூட இல்லை என்பதுதான் ஆச்சிரியம்!!

கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டான ஆம்பியர் (Ampere), தனது புதிய தயாரிப்பான 'மேக்னஸ் ஜி மேக்ஸ்' (Magnus G Max) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியக் குடும்பங்களின் அன்றாடப் பயணத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய ஸ்கூட்டர், 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-இல் ஆம்பியரின் பெயர் இடம்பெறும் அளவிற்கு எட்டு சாதனைகளை படைத்துள்ளது.

புதிய மேக்னஸ் ஜி மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ.94,999 ஆகும். ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு மேக்னஸ் ஜி மேக்ஸ் சிறந்த தேர்வாகும். 'ஈகோ' (Eco) ரைடிங் மோடில் 100 கி.மீ-க்கும் அதிகமான ரேஞ்ச், பிரம்மாண்டமான 33 லிட்டர் பூட் ஸ்டோரேஜ் மற்றும் LFP பேட்டரி ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

ampere launches new electric scooter

மழைக்கால நீலம், மட்சா பச்சை, இலவங்கப்பட்டை செம்பு என மூன்று ஸ்டைலான டூயல் டோன் வண்ணங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது 3 kWh லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரியுடன் வருகிறது. இதற்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கி.மீ.க்கான உத்தரவாதம் உண்டு.

ஆம்பியரின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் இந்த பேட்டரியை 20% இருந்து 80% வரை சார்ஜ் செய்ய 4.5 மணிநேரம் மட்டுமே ஆகும். அதிகப்பட்சமாக 2.4 kW இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய ஹப்-மவுண்டட் மோட்டாரை கொண்ட மேக்னஸ் ஜி மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈகோ, சிட்டி, ரிவர்ஸ் என மூன்று ரைடிங் மோட்களைக் கொண்டுள்ளது.

அதிகப்பட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரட்டை ஃப்ரேம் சேசிஸ், 165 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற அம்சங்கள், இந்தியச் சாலைகளின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹைட்ராலிக் டெலஸ்கோபிக் முன் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் இதில் அடங்கும்.

USB சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 3.5 இன்ச் LCD டிஜிட்டல் கிளஸ்டர் திரை, LED ஹெட்லேம்ப் மற்றும் இண்டிகேட்டர்களுடன் கனெக்டட் அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. இந்த புதிய அறிமுகம் குறித்து கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குநர் விகாஸ் சிங் பேசுகையில், "இந்தியக் குடும்பங்கள் தங்கள் ஸ்கூட்டர்களை அன்றாடம் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த விரிவான ஆய்வுகளின் விளைவே மேக்னஸ் ஜி மேக்ஸ் ஆகும்.

வடிவமைப்பு மற்றும் பொறியியல் முதல் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வரை, பல்வேறு அம்சங்கள் துல்லியமான யதார்த்த உலகத் தரநிலைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் சோதனை செய்யப்பட்டுள்ளன. பயண அனுபவத்தை அதிகரிப்பதுடன், ரேஞ்ச், சப்போர்ட், ஸ்டோரேஜ் வசதி மற்றும் பேட்டரி பாதுகாப்பு ஆகியவற்றில் சீரான தன்மை, நம்பகத்தன்மை மற்றும் மன அமைதியை உறுதி செய்வதே எங்கள் கவனம்.

எங்கள் விரிவான சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சூழல் மூலமாக, நம்பகமான எலெக்ட்ரிக் பயணத்தை வழங்கவும், வாடிக்கையாளர் திருப்தியை அடையவும் மேக்னஸ் ஜி மேக்ஸ் எங்கள் உறுதிப்பாடாகும்" என்றார். சுமார் 17 வருடங்களாக செயல்படும் ஆம்பியர் ஆனது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இடவசதி, ரேஞ்ச் அல்லது அன்றாடப் பயன்பாட்டில் எந்தச் சமரசமும் செய்யாமல் எலெக்ட்ரிக் பயணத்திற்கு மாற விரும்பும் குடும்பங்களுக்கு மேக்னஸ் ஜி மேக்ஸ் ஒரு சிறந்த, நம்பகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். 17 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டுள்ளதால், குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்குவதில் ஆம்பியர் கைத்தேர்ந்ததாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 19, 2026, 17:22 [IST]
English summary
Ampere launches new magnus g max electric scooter check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+