ரூ.1.09 லட்சத்தில் 142 கிமீ ரேஞ்ச்... 30 ஸ்மார்ட் வசதிகளுடன் புதிய ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சந்தைப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், கார்களில் வழங்கப்படுவது போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 30க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்போன் இணைப்பு, வாகனத்தை கண்காணிக்கும் வசதி, நேவிகேஷன் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. அதாவது, தினசரி பயன்பாட்டிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

Ampere Magnus G Max

புதிய ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ் ஸ்கூட்டரில் 3kWh எல்எஃப்பி பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐடிசி சோதனை தரவுகளின்படி, 142 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி அலுவலகப் பயணம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற பயன்பாடு என அனைத்திற்கும் ஏற்ற மாடலாக இது இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரிக்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. எல்எஃப்பி பேட்டரி தொழில்நுட்பமானது, அதிக வெப்பநிலை நிலவும் சூழல்களில் கூட சிறந்த பாதுகாப்பையும், செயல்திறனையும் வழங்குவதுடன் நீடித்த செயல்பாட்டையும் பெற்றிருக்கும்.

Ampere Magnus G Max

அதேபோன்று, இந்த ஸ்கூட்டரில் 2.4kW திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. இந்த ஸ்கூட்டர் 116 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் ஆர்பிட்டர், பஜாஜ் சேத்தக் சி25 மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் போன்ற மாடல்களுடன் போட்டி போடுகிறது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் 142 கிமீ ரேஞ்ச் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கனெக்டெட் வசதிகள் ஆகியவை இந்த விலைப் பிரிவில் இந்த ஸ்கூட்டருக்கு வலு சேர்க்கும் அம்சங்களாக இருக்கின்றன.

பண்டிகை காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளோரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் கூடுதல் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் இந்த புதிய ஆம்பியர் மேக்னஸ் ஜி மேக்ஸ் ஸ்கூட்டர் வந்துள்ளது. நடுத்தர விலை கொண்ட குடும்ப பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிடுவோருக்கு இது முக்கியத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும்.

Article Published On: Thursday, August 13, 2026, 14:40 [IST]
English summary
Ampere magnus g max launched price range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out