ரூ.1 லட்சம் விலைக்குள் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. ரேஞ்சு, வசதிகள் எல்லாம் சூப்பர்!

இந்தியாவில் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் சில நிறுவனங்களில் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியும் ஒன்றாக இருக்கிறது. ஆம்பியர் பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் குறைவான விலையிலேயே தொடர்ந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடுவோம் எனவும் சமீபத்தில் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக மேக்னஸ் நியோ (Magnus Neo) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ளது கிரீவ்ஸ் மொபிலிட்டி. ஏற்கனவே மேக்னஸ் நியோ என்ற பெயரில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், மீண்டும் அதே பெயரில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

Ampere Magnus Neo

பெயர், விலை, வசதிகள் என பிரதானமாக இரண்டு மேக்னஸ் நியோ மாடல்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால் நிறங்கள் மற்றும் டிசைன் என்று வரும் போது மாற்றங்கள் இருக்கிறது. அதேபோல், பிற சின்னச் சின்ன அம்சங்களையும் புதிய மேக்னஸ் நியோவில் கிரீவ்ஸ் மொபிலிட்டி மேம்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் புதிய மேக்னஸ் நியோவை (New Magnus Neo) எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

புதிய மேக்னஸ் நியோ மாடலில் பிரதானமாக மாற்றப்பட்டிருப்பது நிறங்கள். மேக்னஸ் கிராண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கொடுக்கப்பட்டு வரும் நிறங்களுடன், முற்றிலும் புதிதாக மேலும் இரண்டு நிறங்களைச் சேர்ந்த நான்கு தனித்துவமான நிறங்களில் புதிய மேக்னஸ் நியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பட்டர் யெல்லோ, மாட்சா கிரீன், மிஸ்டி மாவ் மற்றும் ஓஷன் ப்ளூ என நான்கு தனித்துவமான நிறங்களில் நாம் வாங்கலாம்.

Ampere Magnus Neo

பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே 2.4 kWh LFP பேட்டரி பேக்கே புதிய மேக்னஸ் நியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி பேக்கானது 118 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கிறது. இதனை 0-80% வரை 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது கிரீவ்ஸ் மொபிலிட்டி. அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் இந்த எலெக்ட்ரிக் ஸகூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

777 மிமீ சீட் உயரம், 106 கிலோ எடை என அனைத்து வகையான பயனாளர்களும் எளிதாகக் கையாளும் வகையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 150 கிலோ வரையிலான எடை சுமக்கும் திறனையும் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின முன்பக்கமும் பின்பக்கமும் 12 இன்ச் மற்றும் 10 இன்ச் வீல்களும், டெலிஸ்கோபிக் மற்றும் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் செட்டப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பக்கமுமே டிரம் பிரேக்குகள் தான்.

இந்த மேம்படுத்தப்பட்ட புதிய மேக்னஸ் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ.86,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது கிரீவ்ஸ் மொபிலிட்டி. பழைய மேக்னஸ் நியோ மாடலும் இதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அருகில் உள்ள ஆம்பியர் டீலர்ஷிப்களில் உடனே சென்று வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது விற்பனையில் இருக்கும் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவான வசதிகளையே இந்த மேக்னஸ் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. எனினும், அதற்கு ஏற்ற வகையில் குறைவான விலையையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஆம்பியர் மேக்னஸ் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் பரிசீலனையில் வைத்துக் கொள்ளலாம்.

Article Published On: Friday, April 24, 2026, 19:50 [IST]
English summary
Ampere new magnus neo electric scooter launched in india check all details here
மேலும்... #ampere electric #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+