வெறும் 69 ஆயிரத்திற்கு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓட்றதுக்கு லைசென்ஸ், நம்பர் பிளேட் எதுவுமே தேவையில்ல!

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஆம்பியர் (Ampere) நிறுவனம் தற்போது புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஆம்பியர் ரியோ விஒய்பி (Ampere Reo VYB) என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வார்ம் ஒயிட், பாஸ்டெல் பர்ப்பிள், டார்க் க்ரே மற்றும் அக்வா மெட்டாலிக் என 4 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

Ampere Reo VYB

எல்இடி லைட்கள், எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் ரிவர்ஸ் மோட் என ஏராளமான வசதிகளை (Features) ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இதன் முன் பகுதியில் 12 இன்ச் அலாய் வீலும், பின் பகுதியில் 10 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 140 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 1,310 மிமீ ஆகவும் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 24 லிட்டர் பூட் ஸ்பேஸ் (Boot Space) வழங்கப்பட்டுள்ளது. எனவே இங்கு ஒரு சில பொருட்களை வைத்து கொள்ளலாம்.

Petrol Bunk

செயல்திறனை பொறுத்தவரையில், ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 1.44 kWh LFP பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 80 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்களாக உள்ளது.

எனவே இதை இயக்குவதற்கு டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. எனவே 18 வயதிற்கு குறைவானவர்கள் கூட இந்த ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தாராளமாக இயக்க முடியும்.

மறுபக்கம் ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை முழுமையாக நிரப்புவதற்கு 5 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 69,499 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். மிகவும் குறைவான விலையில், முதல் முறையாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கு, ஆம்பியர் ரியோ விஒய்பி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அத்துடன் 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் டெலிவரி தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் கூட இது மிகச்சிறந்த ஆப்ஷன்தான் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Wednesday, June 17, 2026, 16:33 [IST]
English summary
Ampere reo vyb electric scooter launched in india price range features charging time
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out