டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டருக்குப் போட்டியா வெளியாகியிருக்கும் புதிய 125 சிசி ஸ்கூட்டர் இது தான்
ஏப்ரிலியா (Aprilia) நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர்களின் ட்ரிபியூட் எடிஷன்களை (Tribute Edition) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த இரண்டு ஸ்கூட்டர்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், இரண்டின் சிறப்பு எடிஷன் மாடல்களையுமே ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறது.
ஸ்டாண்டர்டு SR 125 மற்றும் SR 175 ஸ்கூட்டர் மாடல்களில் இருந்து வசதிகள் ரீதியாகவோ, மெக்கானிக்கலாகவோ புதிய சிறப்பு எடிஷன் மாடல்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் காஸ்மெடிக் ரீதியில் புதுமையான மற்றும் தனித்துவனமான லுக்கை இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கின்றன.

இராணுவ வீரர்கள் அர்பணிக்கும் வகையிலேயே வெளியிடப்பட்டிருப்பதாலேயே இதற்கு ட்ரிபியூட் எடிஷன் எனப் பெயர் வைத்திருக்கிறது ஏப்ரிலியா. எனவே இந்த இராணுவத்தைக் குறிக்கும் வகையில், இராணுவ வீரர்களின் சீருடையில் இருக்கும் நிறங்களைக் கொண்டே புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர்களின் டிசைனை அந்நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இதனை பார்த்தவுடனேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்பு எடிஷன் மாடலைப் பொறுத்தவரையில் SR 125 மற்றும் SR 175 ஆகிய இரண்டின் ட்ரிபியூட் எடிஷன்களுக்கு இடையிலும் கூட பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. ஸ்கூட்டர்களின் பேக் பேனலில் SR 125 அல்லது SR 175 எனக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயரை வைத்தே அது எந்த ஸ்கூட்டர் மாடல் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வடிவமைப்பில் கிட்டத்தட்ட இரண்டின் சிறப்பு எடிஷன் மாடல்களும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை எனக் மேலே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. எனவே SR 125 ட்ரிபியூட எடிஷன் ஸ்கூட்டரிலும் அதே 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 10.6 hp பவர் மற்றும் 10.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
SR 175 ட்ரிபியூட் எடிஷன் ஸ்கூட்டரில் அதே 174 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான். இந்த இன்ஜினானது 13.2 hp பவர் மற்றும் 14.1 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. சிசி அளவில் பெரிய இன்ஜின் கொண்ட மாஸ் மார்க்கெட் மேக்ஸி ஸ்கூட்டர் என்றால் அது இந்த SR 175 தான்.
ஆனால் பவர் மற்றும் டார்க் என்று வரும் போது, யமஹா அல்லது ஹீரோவின் 160 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் அளவிற்கான திறன் SR 175-யிடம் இல்லை. அவை இரண்டும் லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கின்றன. ஆனால் SR 175-யின் விலையும் அதற்கேற்ற வகையில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விலைக்கு வருவோம். ஸ்டாண்டர்டான SR 125 ஸ்கூட்டரை விட 3,000 ரூபாய் மட்டும் அதிகமாக 1.17 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது அதன் ட்ரிபியூட் எடிஷன் மாடல். அதேபோல் SR 175 ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு வெர்ஷனை விட 2,000 ரூபாய் அதிகமாக 1.24 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது அதன் ஸ்பெஷல் எடிஷன் மாடல்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்போர்ட்டியான பெர்ஃபாமன்ஸுடன், அதேநேரம் தனித்துவமான லுக்கைக் கொண்ட ஸ்கூட்டர் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏப்ரிலியாவின் இந்த SR சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்களைத் தேர்ந்தெடுக்கலாம். சாலையில் செல்வோரை ஒருகணம் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையிலான டிசைனை இவை கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதி. ஆனால் மற்ற 125 சிசி ஸ்கூட்டர்களை விடக் கொஞ்சம் கூடுதல் விலை தான்.


Click it and Unblock the Notifications