ரூ.3.99 லட்சம் விலையில் வெளியானது ஏப்ரிலியா டுவோனோ 457 சிறப்பு எடிஷன் பைக்

ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் டுவோனோ 457 (Tuono 457) பைக்கின் சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. சிறப்பு எடிஷன் என்பதால் வெறும் டிசைன் மற்றும் கிராஃபிக்ஸை மட்டும் புதிதாகக் கொடுக்காமல், ஓட்டுபவர்களுக்கு பயன்படக்கூடிய மேம்பாடுகளுடன் இந்த சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது ஏப்ரிலியா.

மேலும், ஸ்பெஷல் எடிஷன் என்றால், ஸ்டாண்டர்டு பைக்கை விட மிகவும் அதிக விலையைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த டுவோனோ 457 பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை மிகவும் விலை உயர்த்தாமல், ஸ்டாண்டர்டு பைக்கை விட 2,000 ரூபாய் மட்டுமே கூடுதல் விலையில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். ஏப்ரிலியா டுவோனோ 457 சிறப்பு எடிஷன் பைக்கை 3.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்க முடியும்.

Aprilia Tuono 457 Special Editon

புதிதாக என்னென்ன மாறியிருக்கிறது?

பைக்கின் மேல் இருக்கும் கிராஃபிக்ஸை புதிதாகவே கொடுத்துள்ளது ஏப்ரிலியா. மேலும், மாம்பா பிளாக் மற்றும் பூமா கிரே என இரண்டு தனித்துவமான நிறங்களையும் புதிய சிறப்பு எடிஷன் பைக் மாடல் கொண்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட டுவோனோ 1000R பைக்கிற்கு அர்பணிக்கும் வகையில் இந்த டுவோனோ 457 சிறப்பு எடிஷன் பைக்கை வெளியிட்டுள்ளது ஏப்ரிலியா.

பார்த்தவுடன் இந்த பைக்கில் புதிதாகத் தெரிவது முன்பக்கம் இருக்கும் ஃபிளைஸ்கிரீன் தான். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது விண்டுபிளாஸ்டில் இருந்து கொஞ்சம் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இது கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்பே ஹேண்டில் பார் கொஞ்சம் உயர்த்தி வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தவுடனேயே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட நேர ரைடிங் மணிக்கட்டுகளை பாதிக்காமல் இருக்க இந்த மாற்றத்தைச் செய்துள்ளது ஏப்ரிலியா.

Aprilia Tuono 457 Special Editon

சீட்களும் சொகுசாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பைக்கின் அதிர்வுகள் அதிகம் உடலுக்கு பரவாத வகையிலான புதிய சீட்களைக் கொடுத்துள்ளது ஏப்ரிலியா. சஸ்பென்ஷன் செட்டப் கொஞ்சம் இலகுவாக்கப்பட்டிருக்கிறது. மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது அதிர்வுகள் மிகவும் பாதிக்காமல் இருக்க ஸ்டிஃப்னஸ் குறைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு பக்க சஸ்பென்ஷனையும் ப்ரீலோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ரைடர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஷன் செட்டப்பை செட் செய்து கொள்ள முடியும். இவற்றுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிகிற வகையிலான பிரேக் லீவர்களையும் புதிய டுவோனோ 457 சிறப்பு எடிஷன் மாடலில் கொடுத்திருக்கிறது ஏப்ரிலியா.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:

இவற்றைத் தவிர வசதிகளிலோ, மெக்கானிக்கலாகவோ புதிய சிறப்பு எடிஷன் பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கிலும் அதே 457 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 47.6 hp பவர் மற்றும் 43.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டு பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் 5 இன்ச் TFT டிஸ்பிளே மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இந்த சிறப்பு எடிஷன் மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர் அம்சமானது, ஸ்டாண்டர்டு டுவோனோ 457 பைக்கைப் போலவே இந்த சிறப்பு எடிஷன் மாடலிலும் கூடுதல் வசதியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் தனியாக விலை கொடுத்தே இதனை நாம் வாங்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறிய மாற்றங்களுடன் ஸ்டாண்டர்டு பைக்கை விட சிறப்பான ஒன்றாகவே இந்த சிறப்பு எடிஷன் மாடல் இருக்கும். மேலும் விலையும் 2,000 ரூபாய் மட்டும் கூடுதல் என்பது சிறப்பு. இந்தியாவில் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொண்ட பைக்குகளில் இந்த ஏப்ரிலியா 450 சிசி பைக்கும் ஒன்று. RS457 ஸ்போர்ட் பைக்கின் நேக்கட் வடிவமாக இந்த டுவோனோ 457 பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Article Published On: Tuesday, June 23, 2026, 18:18 [IST]
English summary
Aprilia tuono 457 special edition launched in india
மேலும்... #aprilia #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out