ஆவலுடன் எதிர்பார்த்த விலை குறைவான ஏத்தர் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது!

மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் 29ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏத்தர் கம்யூனிட்டி டே என்ற வருடாந்திர நிகழ்ச்சியில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா ஸ்கூட்டரைவிட விலை குறைவாக எதிர்பார்க்கப்படுவதால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இருப்போர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த புதிய ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏத்தர் ஆலையின் உற்பத்திப் பிரிவில் இந்த புதிய ஸ்கூட்டரின் அசெம்பிள் செய்யும் பணிகளின்போது எடுக்கப்பட்ட படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Ather EL electric Scooter

இதுதொடர்பாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளபடி,"வரும் 29ந் தேதி நடைபெற உள்ளது எங்களது ஏத்தர் கம்யூனிட்டி டே நிகழ்ச்சியில் இந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இந்த ஸ்கூட்டர் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறந்த மின்சார ஸ்கூட்டரை உருவாக்க தேவையான அடிப்படை தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளில் பல ஆண்டுகளாக பொறுமையுடன் முதலீடு செய்து வருகிறோம். முதல்கட்டமாக காலத்தையும், ஆரம்ப கால வாடிக்கையாளர்களையும் மனதில் வைத்து தயாரிப்புகளை உருவாக்கினோம்.

தற்போது ஒரு தசாப்தத்திற்கு பின் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஆரம்ப கட்டத்தை தாண்டி அடுத்த நிலைக்கு செல்ல உள்ளன. தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் ஏற்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை மையமாக கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட EL01 கான்செப்ட் ஸ்கூட்டரின் டிசைன் தாத்பரியங்கள் தற்போது வர இருக்கும் தயாரிப்பு நிலை மாடலுக்கு ஒத்து இருக்கிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஹீரோ விடா விஎக்ஸ்2, ஓலா எஸ்1 எக்ஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த புதிய மாடல் ரூ.1 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, July 31, 2026, 22:14 [IST]
English summary
Ather el platform electric scooter production begins ahead august 29 launch tamil
மேலும்... #electric scooter #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out