ஸ்கூட்டருடன் கனெக்டரை சேர்த்து வாங்கிட்டா போதும்... வீட்ல சார்ஜ் போடுறதையே மறந்துடுவீங்க!!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), தனது வாடிக்கையாளர்கள் தற்போது நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட பொது ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களை பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது. இந்த சார்ஜர்கள், ஏத்தர் உருவாக்கிய எடை குறைவான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் சிஸ்டம் (Light Electric Combined Charging System - LECCS) கனெக்டர் உடன் இயங்குகின்றன.

இந்தியா முழுவதும் 395-க்கும் அதிகமான நகரங்களில் விரிந்துள்ள ஏத்தர் எனர்ஜியின் இந்த 5000+ ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கில், நேரடியாக ஏத்தர் மூலம் இயக்கும் 3,675-க்கும் மேற்பட்ட சார்ஜர்களும், கூட்டணி நெட்வொர்க்குகள் மூலம் கிடைக்கும் 1,400-க்கும் மேற்பட்ட சார்ஜர்களும் அடங்குகின்றன. இந்த சார்ஜர்கள், நாட்டின் முக்கிய பெருநகரங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், அத்துடன் நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

ather electric scooter riders now can access more than 5000 fast chargers

அந்த வகையில், சென்னை, பெங்களூரு, புனே, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் தற்போது 100-க்கும் மேற்பட்ட LECCS சார்ஜர்கள் செயல்பாட்டில் உள்ளன. குறிப்பாக, ஏத்தர் எனர்ஜியின் தலைமையகம் உள்ள பெங்களூருவில் மட்டும் 240-க்கும் அதிகமான ஃபாஸ்ட்-சார்ஜர்கள் நிறுவப்பட்டுள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் தங்களது எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பொது சார்ஜர்கள் கிடைப்பதாக ஏத்தர் தெரிவித்துள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் 2-வீலர்களை சார்ஜ் செய்ய மலப்புரம், நாசிக், இந்தூர் போன்ற நகரங்களில் தலா 45-க்கும் மேற்பட்ட சார்ஜர்களும், கோழிக்கோடு மற்றும் கோயம்புத்தூரில் தலா 65-க்கும் மேற்பட்ட சார்ஜர்களும் அமைந்துள்ளன. மேலும், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய வெளிநாடுகளிலும் 30-க்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் சார்ஜர்கள் உடன் ஏத்தர் சர்வதேச அளவில் தனது சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது.

ather electric scooter riders now can access more than 5000 fast chargers

இதற்காகவே, எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் முன்று சக்கர வாகனங்களுக்காக பொதுவான பிரத்யேக கனெக்டரை ஏத்தர் வடிவமைத்து உருவாக்கியது. 2021இல் அதன் அறிவுசார் சொத்தை (IP) திறந்துவிட்டதன் மூலம், பலரும் பயன்படுத்தும் ஃபாஸ்ட் சார்ஜிங் தளத்திற்கு வழிவகுத்தது. LECCS கனெக்டர், 2023 அக்டோபரில் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) அங்கீகாரம் பெற்றதுடன், 2023 ஆகஸ்ட் மற்றும் 2024 பிப்ரவரியில் IS17017 என்ற இந்திய தரநிலையாக வெளியிடப்பட்டது.

LECCS தரநிலை ஆனது தற்போது ஹீரோ விடா (Hero Vida), மேட்டர் (Matter) போன்ற மற்ற தயாரிப்பு நிறுவனங்களாலும், போல்ட் (Bolt), கசாம் (Kazam), ஈவாம்ப் (EVamp) போன்ற சார்ஜிங் ஆப்ரேட்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனத் துறையில் சார்ஜிங் இடைசெயல்தன்மையை (interoperability) அதிகரித்துள்ளது. மேலும், ஏத்தர் கிரிட் (Ather Grid) சார்ஜர்கள் கூகுள் மேப்ஸிலும் தென்படுவதால், LECCS கனெக்டர் கொண்ட எந்தவொரு வாடிக்கையாளரும் சார்ஜிங் நிலையங்களை எளிதில் கண்டறிந்து பயன்படுத்தலாம்.

ather electric scooter riders now can access more than 5000 fast chargers

தருண் மேத்தா, ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஏத்தர் எனர்ஜி, 2018இல் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. தற்போது, பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான ஏத்தர் 450 சீரிஸ் மற்றும் 2024இல் அறிமுகமான ஏத்தர் ரிஸ்டா என இரண்டு தயாரிப்புகளில் மொத்தம் ஒன்பது வேரியண்ட்களை ஏத்தர் எனர்ஜி வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 செப்டம்பர் 30 நிலவரப்படி, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உலகளவில் 4,322 ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவி, நாட்டில் பரந்த இருசக்கர வாகன ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை செயல்படுத்தி வருகிறது. அத்துடன், LECCS கனெக்டர் மூலம் மற்ற சார்ஜிங் ஆப்ரேட்டர்களின் சார்ஜர்களையும் பயன்படுத்த முடிவதால், ஏத்தர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் நீண்ட தூரப் பயணங்களையும், தினசரி பயன்பாடுகளையும் தடையில்லாமல் மேற்கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 8, 2026, 23:05 [IST]
English summary
Ather electric scooter riders now can access more than 5000 fast chargers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X