பெட்ரோல் பங்கிற்கு பதிலாக ஷோரூமில் வரிசையில் நிற்கும் மக்கள்! ஏத்தர் ஸ்கூட்டரின் விலை ஏற்கனவே குறைவு!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்திற்கு போட்டியாக இந்த மார்ச் மாதத்திற்கான புதிய சலுகையை அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவரும் தற்போதைய சூழலில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏத்தர் எனர்ஜி அறிவித்துள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஓலா எலெக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை வெகுவாக குறைந்து வருவதால், அதனை சமாளிக்கும் விதமாக தொடர்ச்சியாக சலுகைகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற தருணத்தை பயன்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்து புதிய சலுகைகளை ஓலா வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஓலாவுக்கு போட்டியாக ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.

இதன்படி, குறுகிய கால சலுகையாக ஏத்தர் ரிஸ்டா (Rizta) மற்றும் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சுமார் ரூ.20,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கிரெட் கார்ட் (Credit Card) பயன்படுத்தி ஏத்தர் இ-ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான தள்ளுபடி, ரூ.6,500 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.3,500 மதிப்பிலான ஸ்கூட்டரின் பாகங்களுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஏத்தர் எக்ஸ்பீரியன்ஸ் (Ather Experience) மையங்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இது குறுகிய கால சலுகையாக இந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு இந்த சலுகை மட்டுமில்லாமல், பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிவரும் ரூ.5,000 மானியமும் நிறுத்தப்படுகிறது.

ஆதலால், குறிப்பாக நகரத்தில் வசிக்கும் இளைஞர்கள் உள்பட வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளினால் ரிஸ்டா எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்போது வெறும் ரூ.1,04,758 ஆக குறைந்துள்ளது.
அதேபோல், ஏத்தர் 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,13,100 ஆக குறைந்துள்ளது. இதில், ரிஸ்டா ஆனது ஏத்தர் எனர்ஜியின் பட்ஜெட் விலையிலான குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இதில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற சவுகரியமான அம்சங்களும், அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடிய வசதிகளும் இடம்பெறுகின்றன.
எஸ், இசட் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் 2.9kWh மற்றும் 3.7kWh பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் ரிஸ்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.55 லட்சம் வரையில் உள்ளன. அதேநேரம், 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் செயல்திறன்மிக்க ஸ்கூட்டர்களாக சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏத்தர் 450எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் (Apex) என மூன்று விதமான ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சற்று பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுவதால், அதிவேக பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும். ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கனெக்டட் தொழிற்நுட்பம், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உள்ளிட்டவற்றுடன் அவற்றை விரைவாக சார்ஜ் செய்வதற்காக ஏத்தர் க்ரிட் (Grid) ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் போன்று இல்லாமல், ஏத்தர் எனர்ஜியின் விற்பனை ஒவ்வொரு மாதமும் கணிசமாக மேம்பட்டு வருகிறது. இருப்பினும், வருகிற ஏப்ரல் முதல் மத்திய அரசின் மானியம் தடைப்படுவதால், அதனை சமாளிக்க முன்கூட்டியே தற்போது ரூ.20,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








