ஒட்டுமொத்த இந்தியாவும் வாங்க தவம் கிடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... பேசாம மே மாதத்திலேயே வாங்கி இருக்கலாம்!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை அதிரடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக, ஏத்தர் நிறுவனத்தின் ஃபேமலி ஸ்கூட்டராக விளங்கும் ரிஸ்டாவை பற்றியும், அதில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள விலை அதிகரிப்பை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெங்களூருவில் இருந்து பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்றுதான், ஏத்தர் எனர்ஜி ஆகும். 2020ஆம் ஆண்டிலேயே மார்க்கெட்டில் நுழைந்துவிட்ட ஏத்தர் நிறுவனம் ஆரம்பத்தில் '450' என பெயர் கொண்ட செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. பின்னர், மார்க்கெட்டின் போக்கை புரிந்துக் கொண்டு ரிஸ்டா என்கிற தினசரி பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

ather rizta electric scooter price hike

எந்த வயதில் இருப்பவர்களும் ஓட்டக்கூடிய ஃபேமலி ஸ்கூட்டராக விளங்கும் ஏத்தர் ரிஸ்டா, டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களுக்கு சவாலான போட்டியை அளித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், மார்க்கெட்டில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு ஒரு கவனிக்கத்தக்க இடத்தை பெற்றுக் கொடுத்ததும் ரிஸ்டா ஆகும்.

இருப்பினும், மற்ற வாகனங்களை போன்று ரிஸ்டாவின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஏத்தர் நிறுவனம் தள்ளப்படுகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் இந்த ஜூன் மாதத்தில் இருந்து ரிஸ்டாவின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ரிஸ்டாவின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஏறக்குறைய ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது.

ather rizta electric scooter price hike

அதுவே, விலைமிக்க டாப் வேரியண்ட்களின் விலை ரூ.4,000 அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எஸ் மற்றும் இசட் என இரு விதமான வேரியண்ட்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த இரு வேரியண்ட்களையும் 2.9kWh பேட்டரி உடன் வாங்கலாம். ஆனால், 3.7kWh பேட்டரி ஆனது இசட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இதில், 2.9kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 123கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக் கூடியதாகவும், 3.7kWh பேட்டரி 159கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக் கூடியதாகவும் உள்ளன. பேட்டரி மாறினாலும், ரிஸ்டாவின் இரு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 4.3 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், ரிஸ்டா எஸ் -இல் பல அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளை பெறலாம்.

இதன்படி, ரிஸ்டா எஸ் வேரியண்ட்டில் 7 இன்ச்சில் டீப் வியூ டிஸ்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரீஜெனரேட்டிவ் பிரேக், காம்பி-பிரேக் சிஸ்டம், LED விளக்குகள், 34 லிட்டர்கள் கொள்ளளவில் இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் வசதி, பல எண்ணிக்கைகளில் ரைடு மோட்கள், ஆட்டோ ஹோல்ட், கை மீ ஹோம் விளக்குகள் மற்றும் ஏத்தர் கனெக்ட் வசதிகளை பெறலாம்.

அதுவே, ரிஸ்டா இசட் வேரியண்ட்டில் இன்னும் கூடுதலாக 7-இன்ச் TFT தொடுதிரை, மேஜிக் ட்விஸ்ட், ஸ்கிட் கண்ட்ரோல், தன்னிச்சையாக ஹெட்லைட்டின் பிரகாசத்தை அட்ஜெஸ் செய்துக் கொள்ளும் வசதி, ரிமோட் செயல்பாடுகள், எதிரில் பள்ளம் வருவதையும் வாகனம் மோதலுக்கு உள்ளாகுவதையும் எச்சரிக்கும் வசதி, கூகுள் மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டி, ஆவணங்களை டிஜிட்டலாக சேமித்து வைக்கும் வசதி மற்றும் இருப்பிடத்தை பகிரும் வசதி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் ஏத்தர் ரிஸ்டா ஆனது ஏற்கனவே கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளது. ஆதலால், புதிய விலை உயர்வுகள் அதன் விற்பனையை பெரிய அளவிற்கு பாதிக்காது. அதுவும், ரூ.3,000- 4,000 வரையிலான விலை உயர்வை பெரும்பாலானோர் பெரியதாக கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.

Article Published On: Friday, June 5, 2026, 6:01 [IST]
English summary
Ather energy has increased the prices of rizta elecric scooter in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out