ஸ்கூட்டரை திருடிட்டு எங்கேயும் ஓடிட முடியாது! இழுத்து சென்றாலும் கத்தி ஊரை கூட்டும் சாஃப்ட்வேர்!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்துவதற்காக 'ஏத்தர் ஸ்டேக் 7' (Ather Stack 7) என்கிற அதிநவீன மென்பொருளை உருவாக்கி உள்ளது. விற்பனையில் உள்ள ஒவ்வொரு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் படிப்படியாக வழங்கப்பட உள்ள ஏத்தரின் இந்த புதிய சாஃப்ட்வேர் (Software)-ஐ பற்றியும், இதன் மூலமாக ஏத்தர் வாகனங்களில் கிடைக்கப்பெற உள்ள வசதிகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கூகுள் (Google) வாயிலாக பயணத்திற்கான வழிக்காட்டி: இணைய வசதி பெற்ற மாடர்ன் வாகனங்களில் நேவிகேஷன் (Navigation) எனப்படும் பயணத்திற்கான வழிக்காட்டுதல் ஆனது முக்கியமான அம்சமாக வழங்கப்படுகிறது. ஏத்தர் ஸ்டேக் 7 சாஃப்ட்வேர் மூலமாக கூகுள் மேப்ஸ் (Google Maps) நேரடியாக ஏத்தர் வாகனங்களின் டிஎஃப்டி டாஷ்போர்டு திரையில் கிடைக்கும்.

ather stack 7 software features

இதன் வாயிலாக, ஏரியாவில் சாலை போக்குவரத்து நெரிசல் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும், இருசக்கர வாகனங்களை ஒட்டுவதற்கான பிரத்யேக வழித்தடங்கள் என்ன என்பதையும் வாகனத்தின் டாஷ்போர்டு திரையிலேயே அறியலாம். மேலும், இந்த திரையின் வாயிலாகவே இருப்பிடத்தை மற்றவர்களுடன் வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக பகிர்ந்துக் கொள்ளலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்: நேவிகேஷன் வசதிகள் மட்டுமின்றி, வாகனம் கீழே விழுந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, அவசரகால எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், பாதுகாப்பாக பார்க் செய்வதற்கான உதவி, வாகனத்தை யாரேனும் திருடினாலோ அல்லது இழுத்துச் சென்றாலோ அதுகுறித்த எச்சரிக்கை மற்றும் 'ஃபைண்ட் மை ஸ்கூட்டர்' வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் ஏத்தர் ஸ்டேக் 7 மூலமாக பெறலாம்.

ather stack 7 software features

பிரீமியம் தரத்திலான இணைப்பு வசதிகள்: மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் பாடல்களை வாகனத்தின் டாஷ்போர்டு திரை வாயிலாகவே கட்டுப்படுத்தலாம். மேலும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் குறித்த விபரங்களையும் பெறலாம். இதுமட்டுமின்றி, ஏத்தர் ஸ்டேக் 7 சாஃப்ட்வேர் மூலமாக ஏத்தர் வாகனங்களில் நிறைய கண்ட்ரோல்களை குரல் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம். இதற்காக, அமேசான் அலெக்ஸா (Amazon Alexa)-இன் திறன்கள் பயன்படுத்தப்படும்.

அன்றாட பயன்பாட்டு வசதிகள்: ஏத்தரின் இந்த புதிய சாஃப்ட்வேர் மூலமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை டாஷ்போர்டு திரையில் டிஜிட்டலாக சேமித்து வைக்கலாம். மேலும், மெக்கானிக்கல் ரீதியாகவும் ஆட்டோ ஹோல்ட், மேஜிக் ட்விஸ்ட் மற்றும் மல்டிமீடியா டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகளை ஏத்தர் எலெக்ட்ரிக் வாகனங்களில் பெறலாம். அத்துடன், இந்த சாஃப்ட்வேரை ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்கள் மூலமாக தொடர்ந்து புத்துணர்ச்சியானதாக வைத்திருக்க முடியும்.

எதிர்கால அப்டேட்கள்: ஸ்டேக் 7 சாஃப்ட்வேரை அப்கிரேட் செய்யும் பணிகளில் ஏத்தர் நிறுவனம் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. இதன்படி, மோதல் & சாலைகளின் பள்ளம், மேடுகள் குறித்த எச்சரிக்கைகள், பாதுகாப்பாக ஸ்கூட்டரை லாக் செய்யும் வசதி, இப்போது இருப்பதை விட அதிகமாக வாய்ஸ் கண்ட்ரோலை பயன்படுத்தும் வசதி, ரிமோட் மூலமாக தூரத்தில் இருந்து வாகனத்தை கண்ட்ரோல் செய்யும் வசதி, டாஷ்போர்டு திரையில் கிரிக்கெட் மற்றும் பல மொழிகளில் டாஷ்போர்டு திரை உள்ளிட்டவற்றை வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அட்வான்ஸான நேவிகேஷன், மற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை காட்டிலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள், பிரீமியம் தரத்திலான இணைப்பு வசதி மற்றும் தொடர்ச்சியான ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் உள்ளிட்டவற்றுடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்டேக் 7 சாஃப்ட்வேர் ஆனது ஏத்தர் வாகனங்களை பயன்படுத்துவோரை வேறு உலகத்திற்குள் கொண்டுச் செல்லக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன துறையில் டெக்னாலஜி விஷயத்தில் ஏத்தருக்கு தனி இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Tuesday, May 12, 2026, 23:35 [IST]
English summary
Ather energy introduced stack 7 software features check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+