ஏத்தர் கம்பெனி ஒரு முடிவோட தான் இருக்கு! வீட்டிலேயே வேகமாக சார்ஜ் செய்ய புதிய ஃபாஸ்ட் சார்ஜர் அறிமுகம்!
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதியதாக ஓவர்டோன்ஸ் வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகபடுத்தி உள்ளது. புத்துணர்ச்சியான கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏத்தர் எனர்ஜியின் செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 450X விளங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான கவனத்தை மக்கள் மத்தியில் மேலும் ஏற்படுத்தும் விதமாக புதியதாக ஓவர்டோன்ஸ் வேரியண்ட்களை ஏத்தர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்களின் மூலம் மூன்று புதிய கலர் ஆப்ஷன்கள் 450X ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவையாவன, ஸ்பேஸ் கிரே, லூனார் கிரே மற்றும் ஸ்டில் வொயிட் என்பன ஆகும். இந்த புத்துணர்ச்சியான நிறங்கள் 450X ஸ்கூட்டருக்கு புதுமையான தோற்றத்தை வழங்கியுள்ளன. மற்றப்படி, தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, 450X ஸ்கூட்டரின் வழக்கமான தோற்றம் மற்றும் ஸ்டைலில் தான் புதிய ஓவர்டோன்ஸ் வேரியண்ட்கள் உள்ளன.
இருப்பினும், புதிய 450X ஓவர்டோன்ஸ் ஸ்கூட்டரில் அதன் நிறத்தை பொறுத்து பிரத்யேகமான நிறங்களில் ஹைலைட்களை பெறலாம். இதன்படி, ஸ்பேஸ் கிரே கலர் ஆப்ஷனில் ஆரஞ்சு நிற ஹைலைட்களையும், லூனார் கிரே கலர் ஆப்ஷனில் மஞ்சள் நிற ஹைலைட்களையும், ஸ்டில் வெள்ளை கலர் ஆப்ஷனில் கிரே நிற ஹைலைட்களையும் ஸ்கூட்டரை சுற்றிலும் பெறலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய கலர் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, புதிய ஃபாஸ்ட் சார்ஜரையும் புதிய ஓவர்டோன்ஸ் வேரியண்ட்கள் மூலமாக ஏத்தர் 450X ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பு 700 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஃபாஸ்ட் சார்ஜரின் மூலமாக முன்பை விட 30% வேகமாக சார்ஜ் நிரப்பலாம் என ஏத்தர் நிறுவனம் தெரிவிக்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், மெக்கானிக்கலாக ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் இல்லை. ஏத்தர் 450X ஸ்கூட்டர் மொத்தம் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்று 2.9kWh பேட்டரி, மற்றொன்று 3.5kWh பேட்டரி ஆகும்.
எடை குறைவான அலுமினியம் சேசிஸில் உருவாக்கப்படுவதால் ஏத்தர் 450X ஸ்கூட்டரை கண்ட்ரோல் & ஹேண்ட்லிங் செய்வது எளிதாக உள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், 450X ஸ்கூட்டரை 'ஏத்தர் ஸ்டாக் 7' மென்பொருள் மூலமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தி இருந்தது.
இதன்படி, வாட்ஸ்அப் அலர்ட்ஸ், லைவ் லொக்கேஷன் ஷேரிங், கூகுள்-பவர்டு ஸ்மார்ட் நேவிகேஷன், லைவ் கிரிக்கெட் ஸ்கோர்ஸ், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் & குறுஞ்செய்திகளை கண்ட்ரோல் செய்யும் வசதி, சாலையில் இருக்கும் பள்ளம், மேடுகள் குறித்து எச்சரிக்கும் வசதி மற்றும் ஏத்தர் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை ஏத்தர் 450X ஸ்கூட்டரில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஏத்தர் 450X ஓவர்டோன்ஸ் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.57 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய கலர் ஆப்ஷன்கள், வீட்டிலேயே சார்ஜ் செய்யக்கூடிய ஃபாஸ்ட் சார்ஜர் புதியதாக அறிமுகம் செய்யபட்டுள்ளதால், புதிய ஏத்தர் 450X ஓவர்டோன்ஸ் வேரியண்ட்களை பலர் விரும்பி வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications