ஏத்தர் கம்பெனியை நாடு முழுக்க பிரபலமாக்க போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! தீபாவளி சமயத்தில் அறிமுகமாகுது!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக விரைவில் மார்க்கெட்டில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. கம்யூனிட்டி டே 2025-இல் காட்சிப்படுத்தப்பட்ட 'EL01' கான்செப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாகி வருகிறது.

ஏற்கனவே இந்திய சாலைகளில் இதன் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. வரவிருக்கும் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய தயாரிப்பு, ஏத்தரின் புகழ்பெற்ற ரிஸ்டா (Rizta) மற்றும் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட மலிவான விலையில், அன்றாட தேவைகளுக்கான சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

affordable ather electric scooter

இது சந்தையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் போன்ற முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல புதுமையான விஷயங்களுடன் வெளிவரவுள்ளது. EL01 கான்செப்டின்படி, இதில் இரண்டு ஹெல்மெட்டுகளை தாராளமாக வைக்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய அண்டர்சீட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், வசதியான அகலமான இருக்கை, பெரிய ஃபுட்போர்டு மற்றும் 14-இன்ச் சக்கரங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

கான்செப்ட் மாடல் உடன் ஒப்பிடுகையில் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும் ஸ்கூட்டரில் சில மாற்றங்கள் இருந்தாலும், ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கே உண்டான வடிவம் அப்படியே தக்கவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தரின் புத்தம் புதிய 'EL' கட்டமைப்பில் உருவாகும் இந்த வாகனம், 2 kWh முதல் 5 kWh வரையிலான பல்வேறு பேட்டரி திறன்களையும், வெவ்வேறு சக்கர அளவுகளையும் ஏற்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

affordable ather electric scooter

மேலும், இதில் ஹோம் சார்ஜிங்கை மிகவும் எளிமையாக்கும் வகையில், இருக்கைக்கு அடியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சார்ஜிங் ஒயர் மற்றும் காப்புரிமை பெற்ற ஏசி-டிசி (AC-DC) மாட்யூல் அம்சம் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இதன் தற்போதைய பெல்ட்-டிரைவ் அமைப்பிற்குப் பதிலாக எளிய ஹப்-மோட்டார் (Hub-motor) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

புதிய ஏத்தர்ஸ்டாக் (AtherStack) சாஃப்ட்வேர் உடன் கூடிய தொடுதிரை மற்றும் எளிய டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் இதில் வழங்கப்படலாம். இந்த புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், மஹாராஷ்டிரா மாநிலம் பிட்கினில் உள்ள அவுரங்காபாத் தொழில்துறை நகரத்தில் (AURIC) அமையவிருக்கும் ஏத்தரின் புதிய சத்ரபதி சம்பாஜிநகர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.

விலை குறைவான ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டாலும், இதன் விலை 1 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ரிஸ்டா விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.22 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

இதனை காட்டிலும் குறைவாக, ரூ.1.05 லட்சம் - ரூ.1.10 லட்சத்தில் புதிய ஏத்தர் EL01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். ஏத்தர் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க '450' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.36 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதிகப்பட்சமாக ஏத்தர் 450 அபெக்ஸ் ஸ்கூட்டர் ரூ.1.95 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்யும் அதேநேரத்தில், ரூ.1.05 லட்சம் அளவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தயாராகி வருகிறது. குறைவான விலையில் வந்தாலும், அதிநவீன அம்சங்கள் நிறைந்ததாக எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட் விலையிலான புதிய ஏத்தர் இ-ஸ்கூட்டர் நடுத்தர குடும்பங்களின் கனவு வாகனமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Article Published On: Saturday, June 27, 2026, 15:53 [IST]
English summary
Ather energy planning to launch affordable electric scooter around diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out