எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை படைத்த ஏத்தர் எனர்ஜி

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதில் சில முன்னணி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு நிறுவனம் ஏத்தர் எனர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவில் 2018ம் ஆண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையைத் தொடங்கியதில் இருந்து நேற்ற வரை, அதாவது ஜூன் 25ம் தேதி வரை சுமார் 7 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது. இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டும் நான்காவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் ஏத்தர் எனர்ஜி.

Ather 450X

இதற்கு முன்னதாக, ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ ஆகிய மூன்று நிறுவங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 7 லட்சம் யூனிட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் எட்டியிருக்கிறது. இதற்கு அடுத்ததாக ஹீரோவின் விடா வரிசையில் இருக்கிறது. விரைவில் அந்நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏத்தரின் இந்த மைல்கல்லுக்கு முக்கியமான ஒரு காரணம் ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். 2024ம் ஆண்டு ரிஸ்டாவின் வெளியீட்டிற்குப் பின்பு தான் ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இந்தியாவில் சூடுபிடிக்கத் தொடங்கியது. தற்போது ஒவ்வொரு மாதமும் ஏத்தர் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ரிஸ்டாவின் பங்கு 75 சதவீதமாக இருந்து வருகிறது.

Ather Rizta

நல்ல இடவசதி கொண்ட ரிஸ்டா வாடிக்கையாளர்களின் ஆஸ்தான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாறி வருகிறது. மேலும் ஏத்தரின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இது தான். ஆனால் பொதுப்பார்வையில் இருந்து பார்க்கும் போது 1 லட்சத்திற்கும் மேலான எக்ஸ்-ஷோரூம் விலையையே ரிஸ்டா கொண்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரையே விரும்பி வாங்குகின்றனர்.

இந்த 2026ம் ஆண்டு ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரே ஆண்டில் மூன்று லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை என்ற மைல்கல்லை ஏத்தர் இந்தாண்டு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ல் ஆறு மாதங்கள் கூட முடிவடையாத நிலையிலேயே, 1.63 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கடந்த 2025ம் ஆண்டு 2.15 யூனிட்டுகளை விற்பனை செய்தது தான், ஒரே ஆண்டில் ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்த அதிகபட்ச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அளவாக இருக்கிறது. இந்தாண்டு அதனை முறியடித்து புதிய சாதனையைப் படைக்கும் பயணத்தில் இருக்கிறது இந்த பெங்களூரு நிறுவனம்.

மேலும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இந்த 2026ம் ஆண்டு 91 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஏத்தரின் விற்பனைப் பங்கும் 17.53 சதவீதமாக உள்ளது. இது கடந்தாண்டு 16 சதவீதமாகவும், அதற்கு முன்பு 2024ல் 11.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த அலையில் வெற்றிகரமாக பயணிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜியும் இருக்கிறது. உண்மையில் இந்த வெற்றிக்கு ஏத்தர் எனர்ஜி தகுதியான நிறுவனமும் கூட. யாரும் அறியாத ஒரு நிறுவனமாக இருந்து தற்போது டிவிஎஸ் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் ஏத்தர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையே எடுத்துக் காட்டுகிறது.

தற்போது ஒரு லட்சத்திற்கும் மேலான விலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்து வருகிறது. விரைவில் ஒரு லட்சத்திற்குள்ளான விலையிலும் புதிய மாடல்களை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதன் மூலம் முதலிடத்திற்கும் டிவிஎஸ்ஸுடன் ஏத்தர் போட்டியிட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

Article Published On: Friday, June 26, 2026, 18:10 [IST]
English summary
Ather energy reached 7 lakh electric scooter sales milestone in india
மேலும்... #ather energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out