அடிமாட்டு விலையில் அற்புதமான அம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் நிறுவனம்

இப்போது அதிகளவிலான இந்திய வாடிக்கையாளர்களை எரிபொருள் ஸ்கூட்டர்களை வாங்க முடிவெடுக்கும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஒரு முறை பரிசீலனை செய்கிறார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் நம்பி வாங்கும் ஒரு வாகனமாக மாறியிருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கான தேர்வுகளும் அதிகரித்திருக்கிறது.

வாடிக்கையாளர்களின் இந்த மனமாற்றத்தைப் புரிந்து கொண்டு அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய குறைவான விலையில் புதிய மாடல்களைக் களமிறக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டு வருகின்றன. அதில் முக்கிய நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி (Ather Energy) இருக்கிறது. 450 சீரிஸ் மற்றும் ரிஸ்டா ஆகிய மாடல்களுடன் இந்தியாவின் டாப் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது ஏத்தர்.

Ather EL01 Concept

இந்த நிலையில் மேலும் புதிய விலை குறைவான ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் கான்செப்ட் வடிவத்தை கடந்தாண்டே நாம் பார்த்த நிலையில் தற்போது இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்யத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி சோதனை செய்யும் போது ஏத்தரின் இந்தப் புதிய ஸ்கூட்டர் ஸ்பைஷாட்களிலும் சிக்கியிருக்கிறது.

தற்போது ஏத்தரின் தொடக்கநிலை ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே ரூ.1 லட்சத்திற்கும் மேலான விலையில் தான் தொடங்குகிறது. ஆனால் மற்ற முன்னணி நிறுவனங்கள் எல்லாம் ரூ.1 லட்சத்திற்குள்ளான விலையிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. எனவே ஏத்தரும் ரூ.1 லட்சத்தை ஒட்டிய அல்லது அதற்குள்ளான விலையில் வெளியிட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருகிறது.

Ather EL01 Concept electric scooter

இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக ஏற்கனவே இருக்கும் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தாமல், EL என்ற புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கியது அந்நிறுவனம். இந்த EL பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட EL01 என்ற கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் இடந்தாண்டு அந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனும் இந்த EL01 கான்செப்ட் ஸ்கூட்டரின் டிசைனை கொஞ்சம் ஒற்றிருக்கிறது.

EL01 கான்செப்ட் ஸ்கூட்டரானது ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாறுபட்ட வடிவம் போலவே இருக்கும். குறிப்பாக ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஷார்ப்பான டிசைன் அம்சங்களை ரிஸ்டாவுடன் சேர்த்து வைத்து செய்ததைப் போல இருக்கும். சோதனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், LED விளக்குகள் மற்றும் DRL செட்டப் ஆகியவற்றைக் கொண்டு அந்தக் கான்செப்ட் வடிவை அடிப்படையாக்க கொண்ட ஸ்கூட்டர் தான் என்பதை நம்மால் சொல்ல முடிகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 kWh முதல் 5 kWh வரையிலான LFP பேட்டரி பேக்கை ஏத்தர் பயன்படுத்தலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. அடிப்படை வேரியன்டில் குறைவான விலை காரணமாக நிறைய வசதிகள் இருக்காது என்றாலும், டாப் எண்டு வேரியன்டில் TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடிங் எய்ட்கள் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை ஏத்தர் கொடுக்கும் எனத் தெரிகிறது.

ரூ.1 லட்சம் அல்லது அதனையொட்டி விலையில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாடகை பேட்டரி (BaaS) திட்டத்தையும் இந்த ஸ்கூட்டருக்கு ஏத்தர் வழங்கம் எனத் தெரிகிறது. எனவே இன்னும் குறைவாக ரூ.50,000 முதல் ரூ.60,000-த்திற்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்க முடிகிற வகையில் இருக்கலாம்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தரின் விலை குறைவான ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை BaaS திட்டத்துடன் ரூ.75,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை விட குறைவான BaaS விலையையே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும். இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் புதிய விலை குறைவான ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகளவிலான விற்பனையை மனதில் வைத்தே இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஏத்தர் எனர்ஜி உருவாக்கி வருகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை மாதம் சராசரியாக 8,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த ஏத்தர், தற்போது மாதம் 30,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

எனினும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் மாதத்திற்கு 45,000 முதல் 50,000 எலெக்ட்ரிக் ஸகூட்டர்கள் வரை விற்பனை செய்து வருகின்றன. எனவே இந்த முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடவே விலை குறைவான மாடலை ஏத்தர் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது.

மிகவும் நம்பிக்கையைப் பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் என்பதால் வாடிக்கைாளர்களும் ஏத்தரின் இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளியான பின்பு முதல் மாதத்திலேயே கூட அதிகளவிலான விற்பனையை இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, April 29, 2026, 9:56 [IST]
English summary
Ather energy started testing new low price electric scooter model in india
மேலும்... #ather energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+