எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ல இலவசமா இப்படி ஒரு வசதிய கொடுப்பாங்கன்னு நினைக்கவே இல்லை.. மிரட்டிட்டாங்க!

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முன்வைத்த முக்கியமான வசதிகளில் ஒன்று OTA (Over-The-Air) அப்டேட்கள். அதாவது, நம் ஸ்மார்ட்போனில் புதிய அம்சங்களை சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக வழங்குவதைப் போலவே, எலெக்ட்ரிக் வாகனங்களிலும் நிறுவனங்களால் வழங்க முடியும் என்பது தான். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அப்படி OTA அப்டேட்டாக தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய வசதி ஒன்றை வழங்கியிருக்கிறது.

ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அசிஸ்டன்ட் அல்லது ஆப்பிள் போனில் சிரி மூலம் எப்படி போனில் சில செயல்பாடுகளை வாய்ஸ் கமாண்டு (Voice Command) மூலம் செயல்படுத்த முடியுமோ, அப்படி ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் வாய்ஸ் காமாண்டு மூலம் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிகிற வகையில் புதிய வசதியை தற்போது அளித்திருக்கிறது ஏத்தர் எனர்ஜி.

Ather 450X

450X, 450 ஏபெக்ஸ் மற்றும் ரிஸ்டா Z உள்ளிட்ட ஸ்கூட்டர்களின் மூன்றாம் தலைமுறை மாடல்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால், உங்கள் ஸ்கூட்டரின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்து இப்போதே இந்த வாய்ஸ் கமாண்டு வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம். 450S மற்றும் ரிஸ்டா S ஸ்கூட்டர்களுக்கு இந்த அப்டேட் இல்லை. மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று ஏத்தர் ஸ்கூட்டர் மாடல் மற்றும் வேரியன்டை வைத்திருப்பவர்கள் இப்போதே வாய்ஸ் கமாண்டு வசதியைப் பெறத் தொடங்கவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஏத்தர்ஸ்டேக் 7 (Atherstack 7) இயங்குதளத்தின் ஒரு அம்சமாக இந்த வாய்ஸ் கமாண்டு வசதியை அளித்திருக்கிறது ஏத்தர் எனர்ஜி. ஆனால் இந்த வசதியினைப் பயன்படுத்த ப்ரோ பேக்கிற்கு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் நிறுவனமானது தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய மேம்பட்ட அம்சங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த வசதிகளை எல்லாம் பயன்படுத்த ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுக்கு (Atherstack Pro) நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும்.

Ather Rizta

புதிதாக அறிமுகமாகியிருக்கும் வாய்ஸ் கமாண்டு வசதியைக் கொண்டு ஸ்கூட்டரில் பல்வேறு செயல்பாடுகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். நேவிகேஷன், செட்டிங்ஸ், கால்ஸ், நோட்டிபிகேஷன் மற்றும் மீடியா கண்ட்ரோல்கள் எனப் பல்வேறு அம்சங்களையும் வாய்ஸ் கமாண்டு மூலம் வாடிக்கையாளர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு அருகில் சார்ஜிங் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என்பதை ஸ்கூட்டரிடம் வழக்கமான மொழியில் கேட்டால் போதும், ஸ்கூட்டர் அதற்கான பாதயை டிஸ்பிளே மூலம் காட்டத் தொடங்கிவிடும். இதன் மூலம் பாதையில் மட்டும் நாம் கவனம் செலுத்தலாம். ஸ்கூட்டருடன் பேச எந்தவொரு ப்ளூடூத் சாதனத்தையும் நாம் பயன்படுத்தலாம். ஏத்தர் நிறுனம் ஹேலோ (Halo) என்ற ஹெல்மெட்டை ப்ளூடூத் அம்சத்துடன் விற்பனை செய்து வருகிறது இதன் மூலமும் பேசலாம், அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு ப்ளூடூத் கனெக்டர் கொண்டும் பேசலாம் என்பது முக்கியமானது.

டிஸ்பிளேயின் பிரைட்னஸை அதிகரிப்பது அல்லது ட்ராக்ஷன் கண்ட்ரோல் மோடு மற்றும் ரைடிங் மோடை மாற்றுவது உள்ளிட்ட செயல்பாடுகளையும் கூட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வாய்ஸ் கமாண்டு மூலமே வாடிக்கையாளர்கள் செய்ய முடியும். இந்த வசதியினை கடந்தாண்டு நடைபெற்ற கம்யூனிட்டி டே நிகழ்விலேயே ஏத்தர் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வந்திருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாய்ஸ் கமாண்டு வசதியின் மூலம் தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக்கியிருக்கிறது ஏத்தர். மேலும், இப்படியொரு வசதி இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் கொடுக்கப்படுவது ஓலாவிற்கு அடுத்தபடியாக இது இரண்டாவது முறையாகும். இது ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு இன்னுமொரு முக்கியமான காரணத்தைக் கொடுத்துவிடுகிறது.

Article Published On: Tuesday, June 9, 2026, 14:08 [IST]
English summary
Ather introduced voice command feature to its electric scooters through ota update
மேலும்... #ather energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out